search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி வட்டார விவசாயிகளுக்கு  மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம்
    X

    தருமபுரி வட்டார விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம்

    • 20,000 மரக்கன்றுகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 5 ஏக்கருக்கு 320 மரக்கன்றுகள் வழங்கப்படும்

    தருமபுரி,

    தருமபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தேன்மொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி வட்டார விவசாய பெருமக்கள் திட்டம் 2022-23 கீழ் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் வட்டார விவசாய பெருமக்களுக்கு அவர்களது விளை நிலங்கள் மற்றும் வரப்பு ஓரங்களில் நட்டு பயன்பெறுவதற்காக பலன்தரும் மரக்கன்றுகளான செம்மரம், குமிழ் தேக்கு, மகோகனி, மலைவேம்பு, ரோஸ்வுட், பெருநெல்லி மற்றும் வேங்கை ஆகியவை மொத்தம் 20,000 வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மரக்கன்றுகள் ஒன்றிற்கு ரூ. 15- வீதம் முழுமானியத்தில் வரப்பு மற்றும் வயல் ஓரங்களில் நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 64 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 5 ஏக்கருக்கு 320 மரக்கன்றுகள் வழங்கப்படும்.

    குறைந்த அடர்வு நடவு முறையில் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 200 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 5 ஏக்கருக்கு 1000 மரக்கன்றுகள் வழங்கப்படும்.

    காற்று சுத்தம், வெப்ப தணிப்பு, பறவைகள் இருப்பு மற்றும் நுண்ணுயிர்களுக்கு ஊட்டமாகவும் விளங்கும் மர கன்றுகளை வளர்ப்பதன் மூலம் பசுமை பரப்பு அதிகரிப்பதோடு மண்ணின் அங்கக உயிர் பொருட்கள் மற்றும் ஈரப்பதத்தை அதிகரிப்பதன் மூலம் மண் வளம் மேம்படுத்தப்படும்.

    மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீவனப்பயிர் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதலால் ஏற்படும் தீய விளைவுகள் குறைப்பதோடு விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்கிறது.

    எனவே தருமபுரி வட்டார விவசாயிகள் மரக்கன்றுகளை முழு மானியத்தில் பெற்று பயன் பெறலாம்.மரக்கன்றுகளுக்கு உதவி வேளாண்மை அலுவலர்களான அலே தருமபுரி பெரியசாமி -9443045959, நூலஅள்ளி பச்சமுத்து-7010865280, நல்லான அள்ளி சுப்பிரமணி-7010894028, கிருஷ்ணாபுரம் மணி2010 மணி-2010 மணி. தொடர்பு கொண்டு பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×