search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெற்றிலை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    வெற்றிலை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

    • நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர்.
    • வெற்றிலை விவசாயத்தை காக்க அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் கடத்தூரை சுற்றியுள்ள தாளநத்தம், வேப்பிலை ப்பட்டி, கேத்தூரெட்டி ப்பட்டி, அய்யம்பட்டி, நொச்சி க்குட்டை, முத்தனூர், கோம்பை, மதுனபுரி, வெள்ளியங்கிரி, ஆஸ்தகிரியூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர்.

    பல ஆண்டுகள் பலன் தரக்கூடிய இந்த வெற்றிலையை தொடர்ந்து விவசாயிகள் பாதுகாத்து பயிர் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெற்றிலை மூட்டை ரூ.35 ஆயிரத்தை தாண்டி விற்பதால் மகிழ்ச்சி தருகிறது என்று கூறும் விவசாயிகள் வெற்றிலை கொடிகள் மறுசுழற்சி செய்ய சுமார் மூன்று மாதங்கள் தேவைப்படுகிறது என்கின்றனர்.

    இதனால் வெற்றிலை உற்பத்தி மிகவும் குறைந்து வருகிறது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    மேலும் வெற்றிலை தோ ட்டத்திற்கு தேவைப்படும் செம்மண் எடுக்க அரசு அனுமதி கொடுத்தால் இதன் மூலம் கூடுதல் வருவாய் எங்களுக்கு கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் அரசு வெற்றிலை மூட்டைகளுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்என்ற எங்களின் கோரிக்கை பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த கோரிக்கையை ஏற்று வெற்றிலை விவசாயத்தை காக்க அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×