search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் குறை தீர் கூட்டம்
    X

    விவசாயிகள் குறை தீர் கூட்டம்

    • ஆலையால் ஐந்து கிராம மக்கள் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • கால்வாய்களை தூர்வாரவும், சீர்படுத்தவும் முடியவில்லை என தெரிவித்தனர்.

    அரூர்,

    அரூரில் நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் சுற்றுச் சூழலுக்கு கேடு தரும் அலமேலுபுரம் தனியார் மரவள்ளி கிழங்கு ஆலை மீது பலமுறை விவசாயிகள் புகார் செய்தும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் ஆலையால் ஐந்து கிராம மக்கள் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர் மனுக்கள் கொடுத்தும் வலியுறுத்தியும் மாசு கட்டுப்பாடு வாரியம் மெத்தனபோக்கோடு செயல்படுகின்றது. 20 வருடமாக விவசாயிகள் போராடியும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுப்பணி துறை மீதும் உடந்தையாக உள்ள அலுவலர்கள் மீது பொது நலன் வழக்கு தொடரப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். வரட்டாறு கால்வாய்கள் அணைத்திறப்புக்கு முன்பு தூர்வார வேண்டும் என வலியுறுத்தியும் சரியாக தூர்வாரப்படாததால் நீர் வீணாகிறது என்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதற்கு பதில் அளிக்கையில் பெரும்பாலான ஏரிகள் வட்டார வளர்ச்சி துறை வசம் உள்ளதால் பொதுப்பணித்துறை மூலம் நிதி ஒதுக்கி கால்வாய்களை தூர்வாரவும், சீர்படுத்தவும் முடியவில்லை என தெரிவித்தனர்.

    விவசாயிகளும் கால்வாய் பகுதிகளை தங்களது விவசாயக் கழிவுகளை கொட்டும் இடமாக பயன்படுத்தாமல் ஒத்துழைப்பு தரும் பட்சத்தில் அனைத்து பகுதிகளுக்கும் நீர் செல்ல வசதியாக இருக்கும் எனவும் பொதுப்பணித்துறையினர் விவசாயிகளை கேட்டுக்கொண்டனர்.

    கோபாலபுரம் சர்க்கரை ஆலையில் இணை மின் நிலையம் அமைக்க 13 -ஆண்டுகளுக்கு முன் பங்களிப்பு செய்த விவசாயிகளுக்கு பணத்தை திருப்பி தர வேண்டும் என வலியுறுத்திய விவசாயிகள், சர்க்கரை ஆலையிலிருந்து பொதுக்குழு, மகாசபை உள்ளிட்ட கூட்டங்களுக்கு முறையாக தகவல் தருவதில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

    மேலும் கூட்டத்தின் போது வேளாண்மை துறை சார்பில் ஏர் கலப்பைகள், தார்ப்பாய் ,கடப்பாறை, மண்வெட்டி உள்ளிட்டவைகள் மானிய அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகவும், இதில் 80 சதவீதம், ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்ட கிராமங்களிலும் செயல்படுத்தப் பட்டுள்ளதால் விவசாயிகள் பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டது. bவிவசாயிகள் தார்பாய்கள் வாங்கும் பொழுது மானிய விலை ரூ. 1300 என அறிவிக்கும் அதிகாரிகள் வாங்கும் பொழுது ரூ.1440 பெறுகின்றனர். கூடுதலாக வாங்கும் தொகைக்கு 2021-ல் தயார் செய்யப்பட்டு காலாவதியாகும் நிலையில் உள்ள உயிர் உரத்தை தருவதாக கூறினர். அதற்கு கோட்டாாட்சியர் இனி விவசாயிகள் விருப்பம் இன்றி உயிர் உரம் தரப்படாது என உறுதியளித்தார்.

    கூட்டத்தில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இளஞ்செழியன், பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×