என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
குஜிலியம்பாறை பகுதியில் உழவர் திருவிழா!
- ஆர்.வெள்ளோடு கிராமத்தில் அட்மா திட்டத்தின்மூலம் உழவர் திருவிழா, விவசாயிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் வேளாண்மை இணை இயக்குனர் அனுசியா தலைமையில் நடைபெற்றது.
- உழவன் செயலி பதிவேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறை அருகே ஆர்.வெள்ளோடு கிராமத்தில் அட்மா திட்டத்தின்மூலம் உழவர் திருவிழா மற்றும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கான அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் வேளாண்மை இணை இயக்குனர் அனுசியா தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் கீதா அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு தொடக்க வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் தங்கள் துறையின் மானிய திட்டங்களை விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
உழவன் செயலி பதிவேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வேடசந்தூர் புகையிலை ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி மணிவேல், வேளாண்மை அலுவலர் தியாகராஜன், உதவி வேளாண்மை அலுவலர் ஜோதிராசு, வேளாண்துறை அதிகாரிகள் சப்பாணிமுத்து, நித்யா, காமாட்சி உள்பட பலர் இதில்பங்கேற்றனர்.






