search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கோவிலூர் பெரிய ஏரிக்கு ஆற்று நீர் செல்லும் வாய்க்காலை அடைத்துள்ள சமூக விரோதிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
    X

    ஏரிக்கு ஆற்று நீர் செல்லும் வாய்க்கால் அடைக்கப்பட்டதால் தண்ணீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

    திருக்கோவிலூர் பெரிய ஏரிக்கு ஆற்று நீர் செல்லும் வாய்க்காலை அடைத்துள்ள சமூக விரோதிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

    • பெரிய ஏரிக்கு தண்ணீர் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • தண்ணீர் குறைய குறைய நீர்மட்டமும் குறையும்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் இருந்து திருக்கோவிலூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்லும் வரத்து வாய்க்கால் உள்ளது. கடந்த சில தினங்களாக சமூக விரோத கும்பலைச் சேர்ந்த சிலர் இந்த வாய்க்காலில் அடைப்பு ஏற்படுத்தி, பெரிய ஏரிக்கு தண்ணீர் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் தற்போது மழை நீர் ஓடுகிறது. இந்த நீரை ஏரியில் தேக்கி விவசாயத்திற்கு பயன்படு த்தலாம் என விவசாயிகள் விரும்புகின்றனர். அதேசமயம் மீன் குத்தகை எடுத்தவர்கள் ஏரியில் தண்ணீர் நிரம்புவதை விரும்பவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஏரியில் தண்ணீர் நிரம்பினால் மீன்பிடிப்பது கஷ்டம் எனவும், தண்ணீர் குறைவாக இருக்கும் போது தான் மீன் பிடிக்க முடியும் எனவும் குத்தகைதாரர்கள் விரும்புகின்றனர். அதனால் தான் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் ஓடுகின்ற போதும் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாத ஒரு நிலை காணப்படுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கின்ற நிலையும் உருவாகியுள்ளதாக விவ சாயிகள் புலம்புகின்றனர். மேலும், திருக்கோ விலூர் பெரிய ஏரியில் தண்ணீர் தேங்கி இருக்கும் போது திருக்கோவிலூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். தண்ணீர் குறைய குறைய நீர்மட்டமும் குறையும். இவ்வளவு பிரச்சனைகள் உள்ள நிலையில் ஏரிக்கு தண்ணீர் வரக்கூடிய வரத்து வாய்க்காலில் சிமெண்ட் கட்டைகள் மூலம் தடுப்பு ஏற்படுத்திய சமூக விரோத கும்பல் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×