என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரமற்ற அவரை விதைகளை வழங்கியதாக கூறி மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
    X

    கோப்பு படம்

    தரமற்ற அவரை விதைகளை வழங்கியதாக கூறி மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் புகார்

    • அரசால் அங்கீகரிக்க ப்பட்ட விதை விற்பனை நிறுவனத்தின் மூலம் வாங்கப்பட்ட விதைகள் தரமற்றதாகவும் தகுதியற்றதாகவும் உள்ளது கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • வேளாண்துறை அதிகாரி களிடம் புகார் அளித்த நிலையில் முறையான பதில் கிடைக்காததால் காய்க்காத அவரை செடிகளுடன் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.

    போடி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பா லானோர் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். தற்போது அவரை சாகுபடி செய்ய ஏற்ற பருவம் என்பதால் விவசாயிகள் தங்கள் நிலத்தில் பல ஏக்கரில் அவரை பயிரிட்டு விவ சாயம் மேற்கொண்டனர்.

    இந்நிலையில் ஏக்கருக்கு 30,000 மேல் செலவு செய்து அவரை பயிரிட்ட நிலையில் செடிகள் எதுவும் பூக்காம லும் காய்கள் பிடிக்காமலும் முதிர்ந்து போனது.

    அரசால் அங்கீகரிக்க ப்பட்ட விதை விற்பனை நிறுவனத்தின் மூலம் வாங்கப்பட்ட விதைகள் தரமற்றதாகவும் தகுதியற்றதாகவும் உள்ளது கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சம்பந்த ப்பட்ட நிறுவனத்திடமும் வேளாண்துறை அதிகாரி களிடம் புகார் அளித்த நிலையில் முறையான பதில் கிடைக்காததால் காய்க்காத அவரை செடிகளுடன் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.

    கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்தும் அவரை செடிகள் விளைச்சல் கிடைக்காததால் கவலை தெரிவித்த விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் போலி விதைகள் வழங்கிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    Next Story
    ×