என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீரை விலைக்கு வாங்கி மா மரங்களுக்கு பாய்ச்சும் விவசாயிகள்
    X

    தண்ணீரை விலைக்கு வாங்கி மா மரங்களுக்கு பாய்ச்சும் விவசாயிகள்

    • பிஞ்சு வைக்கும் நிலையில் தற்போது மழை பொய்த்து போனது.
    • தண்ணீரை விலைக்கு வாங்கி மா மரங்களுக்கு விட்டு விளைச்சலை பெருக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில், நாகரசம்பட்டி, என்.தட்டக்கல், வேலம்பட்டி, சந்துார், மத்துாரில் சுமார் 5,000 ஏக்கரில் மா விவசாயம் நடக்கிறது.

    கடந்தாண்டு இறுதியில் தொடர்ந்து மழை பெய்ததால், தற்போது மாஞ்செடிகளில் பூ பிடித்து, பிஞ்சு வைக்கும் நிலையில் தற்போது மழை பொய்த்து போனது. இதனால் கடும் வெயிலினால் பூக்கள் கருகி, பிஞ்சு வெதும்பி விழும் என்பதால் வேறு வழியின்றி விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி மா மரங்களுக்கு விட்டு விளைச்சலை பெருக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    குறிப்பாக போச்சம்பள்ளி சுற்றுவட்டாரத்தில், மழை பொய்த்துப் போனதால் மா மரங்களில் பூக்கள் கருகி வருவதை தடுக்க விவசாயிகள் நீரை விலைக்கு வாங்கி, மாமரத்திற்கு விட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து மோட்டூரை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில் வெயிலின் தாக்கத்தால் மா பூக்கள் கருகி வருகிறது.

    இதனால், ஒரு டிராக்டர் தண்ணீர் 400 ரூபாய் என நாள் ஒன்றுக்கு 5 டிராக்டர்கள் வரை தண்ணீர் வாங்கி மாஞ்செடிகளுக்கு பாய்ச்சி வருகிறோம் என்றார்.

    Next Story
    ×