search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாங்காய் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    மாங்காய் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

    • மா சீசன் நவம்பர் கடைசியில் துவங்கி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதத்தில் மா ரகங்களில் பூக்கள் பூக்க தொடங்கி யது.
    • தற்போது மாங்காய்கள் கொத்து கொத்தாக காய்ந்து தொங்குகின்றது.

    தருமபுரி,

    தருமபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்து வருகின்றனர்.

    குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு 30 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்ப ட்டுள்ளது.

    காரிமங்கலம், பாலக்கோடு, மொரப்பூர், ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி மற்றும் பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி அரூர் ஆகிய வட்டாரத்திலும் மா சாகுபடி செய்துள்ளனர். இங்கு செந்தூரா, அல்போன்சா, பெங்களூரா, நீளம், பங்கன பள்ளி, உள்ளிட்ட ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளனர்.

    இங்கு விளைகின்ற மாம்பழங்கள் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    பருவநிலைக்கு ஏற்ப மா உற்பத்தி திறன் மாறுபடும். இதனால் மா உற்பத்தி சராசரி விலையை கணிக்க முடியாத நிலையில் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 10 மாங்கூழ் தயாரிக்கும் சிறிய ஆலைகள் உள்ளன.

    இந்த ஆலைகள் மூலம் ஈரான், துபாய், உள்ளிட்ட நாடுகளுக்கு மாங்கூழ் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மா சீசன் நவம்பர் கடைசியில் துவங்கி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதத்தில் மா ரகங்களில் பூக்கள் பூக்க தொடங்கி யது. தற்போது மாங்காய்கள் கொத்து கொத்தாக காய்ந்து தொங்குகின்றது.

    இதுகுறித்து விவசாயி கூறும்போது தருமபுரி மாவட்டத்தின் இந்த வருடம் அதிக மழை பொழிந்துள்ளதால் மா விளைச்சல் அமோகமாக உள்ளது.

    இந்த வருடம் மா பூ பிடித்த போது மாவட்டத்தில் நல்ல பனிப்பொழிவு மற்றும் பூச்சி தாக்குதல் அதிகமாக இருந்தது. மாம்பூக்கள் அதிகமாக உதிர்ந்தது. தற்போது கோடை காலம் தொடங்கியதால் வெயில் மற்றும் கோடை மழையில் மாம் பிஞ்சுகள் உதிர்ந்தன. ஒரு சில இடங்களில் மாங்காய் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

    பெங்களூரா ரகம் மாங்காய் நல்ல விளைச்சல் உள்ளது. மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாங்கூழ் ஆலைகள் உள்ளன. நாங்கள் விளைவிக்கும் மாங்காய்களை அறுவடை செய்து ஆலைக்கு நேரடியாகச் சென்று விற்பனை செய்து வருகிறோம். மாற்ற ரகங்களான செந்தூரா, அல்போன்சா, நீலம், பங்கன பள்ளி, ஆகியவைகளை அறுவடை செய்து தினசரி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறோம்.

    தற்போது கோடை வெயில் ஆரம்பித்து உள்ளதால் தண்ணீர் இல்லாத மா மரங்களில் மாங்காய் உதிர்ந்து வருகிறது. நல்ல தண்ணீர் பாய்ச்சினால் உதிர்வது தடுக்கப்படுகிறது.

    மேலும் ஒரு விவசாயி கூறுகையில் 30 வருடங்களுக்கு மேலாக மா விவசாயம் செய்து வருகிறோம். காரிமங்கலம் ஒன்றியத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மா மரம் பூப்பதில் இருந்து அறுவடை செய்யும் வரை மருந்து கடைகளில் ஆலோசனை கேட்டு அதன்படி தான் சாகுபடி செய்து வருகிறோம். இந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 டன் வரை மாங்காய் விளைச்சல் உள்ளது. இதனால் இந்தாண்டு ரூ.18 முதல் 20 ரூபாய் வரை நல்ல விலை போகிறது என கூறினார்.

    Next Story
    ×