search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் மானியத்தில் வேளாண் எந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்
    X

    விவசாயிகள் மானியத்தில் வேளாண் எந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்

    • விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது.
    • பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியமும், இதர பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமும் வழங்கப்பட உள்ளது.

    தருமபுரி,

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கிராம ஊராட்சி விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது.

    இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதி நிலை அறிக்கையில், வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக 2023-24 ஆம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு பெருமளவில் பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவிகள் மானியத்தில் (கிராம ஊராட்சிக்கு இரண்டு அல்லது மூன்று) வழங்க ஒதுக்கீடு பெறப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் சிறு, குறு, பெண் விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியமும், இதர பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமும் வழங்கப்பட உள்ளது. இதில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது.

    தருமபுரி மாவட்டத்திற்கு 2023-24 ஆம் ஆண்டில் 49 கிராம ஊராட்சியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    அதன்படி, தருமபுரி வட்டாரத்தில் குப்பூர், A. கொல்லஅள்ளி, நல்லசேனஅள்ளி, கடகத்தூர், கிருஷ்ணாபுரம், அரூர் வட்டாரத்தில் பொன்னேரி, வடுகப்பட்டி, சின்னாகுப்பம், தீர்த்தமலை, கொக்காரப்பட்டி, கோபிநாதம்பட்டி, கோபாலபுரம், கடத்தூர் வட்டாரத்தில் தாளநத்தம், மோட்டாங்குறிச்சி, ரேகடஅள்ளி, சுங்காரஅள்ளி, கார்த்தனூர், காரிமங்கலம் வட்டாரத்தில் பேகாரஅள்ளி, கோவிலூர், எழுமிச்சனஅள்ளி,

    மல்லிக்குட்டை, அண்ணாமலைஅள்ளி, மொரப்பூர் வட்டாரத்தில் ஜக்குபட்டி, கோபிநாதம்பட்டி, பன்னிகுளம், போளையம்பள்ளி, நல்லம்பள்ளி வட்டாரத்தில் கம்மம்பட்டி, கோணங்கி அள்ளி, பூதானஅள்ளி, மாதேமங்கலம், எச்சனஅள்ளி, பேடரஅள்ளி, பாலக்கோடு வட்டாரத்தில் கணபதி, பேவுஅள்ளி, சூடணூர், செக்கோடி, M.செட்டிஅள்ளி, சிக்காதோரணபெட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் மஞ்சவாடி, பாப்பம்பாடி, போதகாடு,

    மெணசி, ஏரியூர் வட்டாரத்தில் கேண்டேனஅள்ளி, அஜ்ஜனஅள்ளி மற்றும் பென்னாகரம் வட்டாரத்தில் அஞ்சேஅள்ளி, தித்தியோப்பனஅள்ளி, வேப்பிலைஅள்ளி, மாதேஅள்ளி, ஆச்சாரஅள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளை சார்ந்த விவசாயிகள் மானியத்தில் பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவி மானியத்தில் பெற சிட்டா, அடங்கல்,

    நிலத்தின் வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு நகல், மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி (தொலைபேசி: 04342-296132) மற்றும் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, ஒழுங்குமுறை விற்பணை கூட வளாகம், திருப்பத்தூர் மெயின்ரோடு, அரூர் (தொலைபேசி: 04346-296077) அலுவலகங்களை தொடர்புகொண்டு விண்ணப்பங்களை உடனடியாக அலுவலகத்தில் பதிவு செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×