என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார்களில் ஊடகங்கள் பெயரில் போலி ஸ்டிக்கர்: டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் அதிரடி நடவடிக்கை

    • இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • கார்களில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்கள் போலியானது என்பது தெரியவந்தது.

    மாமல்லபுரம்:

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று இரவு மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் போலீசார் தடுப்புகளை அமைத்து சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பிரபல ஊடகம், பத்திரிகை என ஸ்டிக்கர் ஒட்டி வந்த 4 கார்களை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், அது போலியானது என்பதும், அவர்கள் அங்கு பணி புரியவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 4 கார்களுக்கும் 21 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். கார்களில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களையும் அகற்றினர். பின்னர் அவர்களின் உறவினர்களிடம் தொலைபேசியில் பேசி, அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×