என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள காலாவதியான தின்பண்டங்களை படத்தில் காணலாம்.
சாலையோரத்தில் கொட்டப்படும் காலாவதியான திண்பண்டங்கள்
- பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை பகுதி களில் சாலையோரம் காலாவதியான உணவுப்பொருட்களை கொட்டுவதால், அப்பகுதி யில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
- காலா வதியான குளிர்பானங்கள் மற்றும் பல்வேறு வகையான பாக்கெட் திண்பண்டங் களை சாலையோரம் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை பகுதி களில் சாலையோரம் காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள், நூடுல்ஸ் பாக்கெட்டுகள், குளிர்பான பாக்கெட்டுகளை கொட்டுவதால், அப்பகுதி யில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு, இச்சாலை வழியாக வரும் பள்ளி குழந்தைகள் இவற்றை எடுத்து சாப்பிடும் நிலை உள்ளது. இதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள், பரமத்திவேலூர் மட்டு மன்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலா வதியான குளிர்பானங்கள் மற்றும் பல்வேறு வகையான பாக்கெட் திண்பண்டங் களை சாலையோரம் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உடனடியாக அங்கிருந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






