என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி வனவிலங்குகள் நிறைந்த அற்புத வனப்பகுதி ஆகும்.
மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கிய பகுதியாக திகழும் இந்த காட்டில்தான் ஒரு காலத்தில் சந்தனமரம் கடத்தல்காரன் மாயாவி வீரப்பன் 20 ஆண்டுக்கு மேலாக கோலோச்சி இருந்தான்.
இவனும் இவனது கூட்டாளிகளும் காட்டில் தங்கி இருந்த போது ஏராளமான யானைகள் கொல்லப்பட்டன. தந்தங்களை கடத்துவதற்காக இந்த யாகைள் கொல்லப்பட்டன. மேலும் பல அரிய வன விலங்குகளும் வீரப்பனால் கொல்லப்பட்டன.
அதிரடிப்படை வீரர்களால் மாயாவி வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு சத்தியமங்கலம் வனம் புத்துணர்வு பெற்று திகழ்கிறது.
யானைகள், காட்டெருமைகள், பல அரியவகை மான் இனங்கள் மற்றும் புலி, சிறுத்தைகளின் எண்ணிக்கையும் சத்திய மங்கலம் வனப்பகுதியில் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆண்டு தோறும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இந்த கணக்கெடுப்பு பணி சில காரணங்களால் நடக்கவில்லை.
இந்த நிலையில் இந்தாண்டு சத்தி வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணி வரும் 8-ந்தேதி தொடங்கி 14-ந்தேதி வரை மொத்தம் ஒரு வாரம் நடக்கிறது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள மொத்தம் 46 பீட்களில் இந்த கணக்கெடுப்பு நடக்கிறது. ஒவ்வொரு ‘பீட்’ பகுதியிலும் 5 பேர் கொண்ட குழுவினர் காட்டுக்குள் புகுந்து இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.
இவர்களுக்கு ஒவ்வொரு வனத்துறை அலுவலகத்திலும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பில் ஈடுபடுவது எப்படி? என்பதை பற்றி கடந்த 1-ந் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வரும் 8-ந் தேதி வரை நடக்கிறது.
பயிற்சி எடுத்த இவர்கள் ஒவ்வொரு குழுவினராக பிரிந்து அடர்நத காட்டுக்குள் தகுந்த பாதுகாப்பு ஆயுதங்களுடன் புகுகிறார்கள்.
யானைகளின் வழிதடம், விலங்குகளின் எச்சம் மற்றும் நீர் நிலைகளில் இந்த குழுவினர் முகாமிட்டு வன விலங்குகளின் கணக்கெடுப்பில் ஈடுபடுகிறார்கள்.
சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு புலிகளின் எண்ணிக்கை கணிசமாக கடந்த தடவை உயர்ந்தது. அதேபோல் தற்போது நடக்க உள்ள கணக்கெடுப்பின் போதும் புலிகளின் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
பவானி:
பவானி அருகே உள்ள சித்தார் பெரியங்காட்டை சேர்ந்தவர் ரவி கூலி தொழிலாளி. இவரது மனைவி இந்து (வயது 28). இவருக்கு சில மாதங்களாக வயிற்று வலி இருந்ததாம். இதனால் ஆஸ்பத்திரியில் மருந்து மத்திரை வாங்கி சாப்பிட்டு வலி குறையவில்லையாம்.
இதனால் நேற்று இரவு இந்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை பவானி அரசு ஆஸ்பத்தியில் சேர்த்து பிறகு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு அங்கமுத்து லைன் மண்டபம் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 30). இவர் ஒரு வேலை விஷயமாக சித்தோடு வந்தார்.
பிறகு அங்கிருந்து ஒரு கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் சதீஷிடம் குடிக்க பணம் கொடு என்று கேட்டாராம்.
இதற்கு சதீஷ் ‘‘உனக்கு ஏன் பணம் தர வேனும். நீ யாரென்றே எனக்கு தெரியாது’’ என்று கூறினார்.
உடனே அந்த வாலிபர் கத்தியை காட்டி, நான் ரவுடி என்று உனக்கு தெரிந்தும் நீ என்னிடம் பேசுறீயா என்று கூறி சதீஷ் பையிலிருந்த ரூ.100-ஐ பறித்து கொண்டு சென்று விட்டாராம்.
இது குறித்து சதீஷ் சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்கு பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடியை கைது செய்தார்.
விசாரணையில் அவரது பெயர் பிரகாஷ் என்றும் ஈரோடு கோணவாய்க்காலை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
அரச்சலூர் அருகே உள்ள தலவு மலை வாய்க்கால் பாலம் பகுதியில் அரச்சலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்டு ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு முதியவர் மதுபானத்தை அதிக விலைக்கு விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டனர். உடனே போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சின்னப்பன் (வயது 80) என்றும் அரச்சலூர் அருகே உள்ள வெடிக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு பி.பி. அக்ர ஹாரம், 16 ரோடு, வீரப்பன்சத்திரம், காவிரி ரோடு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 11 பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு ஒரு ஆட்டோ இன்று காலை மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றது.
இந்த ஆட்டோ மாணிக்கம்பாளையம் மெயின் ரோட்டில் இருந்து நேதாஜி நகருக்கு செல்லும் ரோட்டில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த ஆட்டோ டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து அருகில் இருந்த கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்தது.
ஆட்டோவில் இருந்த மாணவர்கள் அலறத் தொடங்கினார்கள். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆட்டோக்குள் தவித்த 11 மாணவர்களையும் பத்திரமாக மீட்டனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் ஆட்டோவை நேராக நிமிர்த்தினார்கள். மீட்கப்பட்ட 11 மாணவர்களும் மிகவும் பதட்டத்துடன் இருந்தனர்.
உடனடியாக மாணவர்கள் மீட்கப்பட்டதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுபற்றிய தகவல் கிடைத்தும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், ஈரோடு வீரப்பன்சத்திரம் காவிரி ரோடு பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (வயது 40) என்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
நேதாஜி நகர் பகுதியில் காலை நேரங்களில் செல்லும் அனைத்து ஆட்டோக்களிலும் இப்படித்தான் அதிகமான பள்ளிக்கூட மாணவர்களை ஏற்றிச்செல்கிறார்கள். இதை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. நல்ல வேலையாக இன்று எந்த மாணவர்களுக்கும் காயம் ஏற்படவில்லை.
இனியாவது இது போன்று நடக்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈரோடு பழைய பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மனைவி சரோஜா (வயது 55). இவர்களுக்கு நிர்மலா, தனலட்சுமி என்ற 2 மகள்களும், மணிகண்டன், பாஸ்கரன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
மகள்கள் இருவரும் திருமணமாகி கோவையில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று சரோஜா கோவையில் உள்ள தனது மகள் நிர்மலாவுக்கு கொடுப்பதற்காக ரூபாய் 60 ஆயிரத்தை பர்சில் வைத்து கொண்டு ஈரோட்டில் இருந்து கோவைக்கு ஒரு பயணிகள் ரெயிலில் சென்றார்.
ரெயில் ஈரோட்டை அடுத்துள்ள தொட்டிபாளையம் பகுதியில் வந்தபோது சரோஜாவிற்கு திடீரென குளிர் காய்ச்சல் வந்தது. நடுங்கிய நிலையில் இருந்த அவரை பெருந்துறை ரெயில்வே ஸ்டேசனில் ரெயிலை நிறுத்தி இறக்கினர்.
ரெயில்வே ஊழியர்கள் சரோஜாவை தூக்கி கொண்டு அங்கிருந்த பயணிகள் வெயிட்டிங் ரூமில் படுக்க வைத்து அவர் கையில் வைத்திருந்த பையில் இருந்த அவரது சேலையை எடுத்து போர்த்தி விட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் சரோஜாவின் மகன் பாஸ்கரன் அங்கு வந்தார். அப்போது தனது தாயார் வைத்திருந்த பையில் மணிபர்ஸ் இல்லாதது தெரிய வந்தது. அதற்குள் இருந்த ரூபாய் 60 ஆயிரம் பணம் காணாமல் போனது கண்டு திகைத்த பாஸ்கரன் இது பற்றி அங்கிருந்த ரெயில்வே ஊழியர்களிடம் கேட்டார். ஆனால் அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று கூறினர்.
இது பற்றி திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கிருந்த ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடல்நிலை சரியில்லாததால் வழியில் இறங்கிய பெண்ணிடம் இருந்த பணத்தை அபேஸ் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி வனவிலங்குகள் நிறைந்த அற்புத வனப்பகுதி ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கிய பகுதியாக திகழும் இந்த காட்டில்தான் ஒரு காலத்தில் சந்தன மரம் கடத்தல்காரன் மாயாவி வீரப்பன் 20 ஆண்டுக்கு மேலாக கோலோச்சி இருந்தான்.
இவனும் இவனது கூட்டாளிகளும் காட்டில் தங்கி இருந்த போது ஏராளமான யானைகள் கொல்லப்பட்டன. தந்தங்களை கடத்துவதற்காக இந்த யாகைள் கொல்லப்பட்டன. மேலும் பல அரிய வன விலங்குகளும் வீரப்பனால் கொல்லப்பட்டன.
அதிரடிப்படை வீரர்களால் மாயாவி வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு சத்தியமங்கலம் வனம் புத்துணர்வு பெற்று திகழ்கிறது.
யானைகள், காட்டெருமைகள், பல அரிய வகை மான் இனங்கள் மற்றும் புலி, சிறுத்தைகளின் எண்ணிக்கையும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆண்டுதோறும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இந்த கணக்கெடுப்பு பணி சில காரணங்களால் நடக்கவில்லை.