என் மலர்
ஈரோடு
காங்கிரஸ் கட்சி சார்பில், இந்திரா காந்தி நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திராகாந்தி, காமராஜர் ஆகியோர் வெள்ளையனை எதிர்த்து போராடி சிறைக்கு சென்றவர்கள். அது தியாகத்தின் உச்சகட்டம். தற்போது உள்ளவர்கள் ஊழலுக்காக சிறைக்கு செல்கிறார்கள். இது கொள்ளையின் உச்சகட்டம்.
புத்தர் போதிமரத்தடியில் ஞானம் பெற்றார். இப்போது உள்ளவர்களுக்கு சுடுகாட்டில் போய் தியானம் செய்தால் ஞானம் வருகிறது. தமிழகத்தின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. கொள்ளை, கொலை செய்தவர்களிடம் ஆட்சி இருக்கிறது. அரசியலில் இருந்து சசிகலாவின் குடும்பத்தையே வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு ஒருவருக்கு தொப்பி சின்னமும், மற்றொருவருக்கு இரட்டை மின் கம்பமும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு தொப்பி போட்டுவிடுவார்கள். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு பொதுமக்கள் அ.தி.மு.க.வை முடக்கிவிட்டார்கள் என்று செய்தி வரும்.
எனக்கு சிலர் எச்சரிக்கை விடுக்கிறார்கள். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே நான் பயப்படவில்லை. எனக்கு எச்சரிக்கை விடுப்பவர்கள் கொசு. உங்கள் மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்.
இந்தியாவிலேயே தமிழகத்தை ஆண்ட காமராஜர் ஆட்சி தான் சிறந்த ஆட்சி என்று கூறுவார்கள். ஆனால் தற்போது லஞ்சம், ஊழல் பெருகிய மாநிலமாக தமிழகம் உள்ளது. ஊழல் செய்யப்பவர்களை மக்கள் ஆதரிக்க கூடாது. அரசியலில் இருந்து அவர்களை ஒதுக்க வேண்டும். ஊழல் வாதிகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்றுவது காங்கிரஸ் கட்சியின் கடமை ஆகும். ரூ.50 கோடி கொடுத்து துணை வேந்தர் பதவிக்கு வருகிறார்கள். இவர்கள் பதவிக்கு வந்தவுடன் கல்வி தரத்தை உயர்த்த பாடுபடுவார்களா?
உத்தரபிரதேச மாநிலத்தில் மாட்டு இறைச்சி விற்கக்கூடாது. கடைகளை மூடவேண்டும் என்று ஆளும் பாரதிய ஜனதா கட்சி சொல்கிறது. இவர்கள் பொதுமக்களை சாமியாராக்க பார்க்கிறார்களா?. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர நீங்கள் அனைவரும் இப்போது இருந்தே பாடுபட வேண்டும்.
ஈரோடு:
கோபி லக்கம்பட்டி அருகே கரட்டடி பாளையத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை வரவேற்று பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா, அ.தி.மு.க. பொது செயலாளர் சசிகலா படமும், செங்கோட்டையன் படமும் உள்ளது.
இதில் ஜெயலலிதா- சசிகலா படம் கிழிக்கப்பட்டு உள்ளது, சசிகலா அதிருப்தியாளர்கள் இந்த படத்தை கிழித்தார்களா? அல்லது மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்பது தொயவில்லை .
இந்த சம்பவம் கோபி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் காங்கிரஸ் சார்பில் இன்று மாலை இந்திரா காந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், பண மதிப்பிழப்பு குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில காங்.துணை தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.
பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கவனித்து வரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்பது அனைவராலும் எதிர்பார்த்ததுதான்.
அ.தி.மு.க.வில் இப்போது தெரிந்தே 3 பிரிவுகளாக உள்ளனர். இன்னும் தெரியாமல் எத்தனை அணிகள் உள்ளார்களோ தெரியவில்லை. விரைவில் அதுவும் வெளிச்சத்துக்கு வரும் கட்சியும் முடங்கும்.
அ.தி.மு.க. கோஷ்டிகளின் சண்டையால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது. நடக்க உள்ள ஆர்.கே. நகர் தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க.வை மக்கள் முடக்கி விடுவார்கள்.
இப்போதுள்ள 3 அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. ஆனால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தொண்டர்கள் ஆதரவு அமோகமாக உள்ளது. திடீரென கட்சிக்கு துணை பொதுச்செயலாளர் ஆகி ஆர்.கே. நகர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் தினகரன். அவர் வரலாற்று வெற்றி பெறுவார் என்கிறார்கள் அ.தி.மு.க. அமைச்சர்கள். அவர் வரலாற்று வெற்றி பெறமாட்டார் வரலாற்று தோல்வியையே பெறுவார். ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பிறகு தினகரன் அன்னிய செலவாணி மோசடி வழக்கில் சிறைக்குதான் போவார். சட்டசபைக்கு போக மாட்டார் இது உறுதி.

சசிகலாவைப்போல் தினகரனாலும் இனி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை நிச்சயம் வரும். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவரது படத்தை அ.தி.மு.க. அரசு பயன்படுத்துவது தவறு.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி வந்தது மூலம் அங்கு சிறுபான்மையினருக்கு ஆபத்து வந்துள்ளது. மாநில முதல் மந்திரியாக யோகி பொறுப்பேற்றுள்ளார். இவர் ஆட்சிக்கு வந்ததும் இறைச்சி சாப்பிடக் கூடாது என்றும் இறைச்சி கடைகளை மூட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்
இதன் மூலம் உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.
அன்னை சோனியா காந்திக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதால் ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறுவது வரவேற்கத்தக்கது. ராகுல்காந்தி துடிப்பான தலைவர். அவர் தலைவர் பொறுப்பை ஏற்றால் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் கட்சி வளரும்.
தற்போது நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ராகுல்காந்திதான் காரணம் என்று கூறுவது தவறு. அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெளிப்பாடுதான் காரணம்.
பிரியங்கா காந்தி தீவிர அரசியலுக்கு... முழுமையான அரசியலுக்கு வர வேண்டும். இது காங்கிரஸ் தொண்டர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
பவானிசாகர் அடுத்த பகுத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மனைவி வீரலட்சுமி (வயது43). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மயில்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்றும் மயில்சாமி குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதை வீரலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
பின்னர் மயில்சாமி மகன்களுடன் தூங்க சென்று விட்டார். மனவேதனையுடன் இருந்த வீரலட்சுமி தற்கொலை செய்ய முடிவெடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலையில் கண்விழித்து பார்த்த மயில்சாமி தனது மனைவி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வீரலட்சுமி உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம் கருவேலங்காட்டைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன்குமார் (வயது 21) லாரி டிரைவர்.
நேற்று இவர் அரியலூரில் இருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடிக்கு சிமெண்டு லோடு ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.
ஈரோட்டை தாண்டி கோபியை நோக்கி இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் அந்த லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது நகர எல்லையில் கோபி நகராட்சி ஸ்தூபி (வளைவில்) அந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அந்த ஸ்தூபி இடிந்து தூள்... தூள் ஆனது.
கடந்த 01.12.1958-ல் கோபியில் தமிழ்நாடு அரசியல் மாநாடு நடந்தது. அதன் நினைவாக இந்த ஸ்தூபி (வளைவு) கட்டப்பட்டது. இதனை அப்போதைய முதல்- அமைச்சர் காமராஜர் திறந்துவைத்தார். அந்த ஸ்தூபி முற்றிலும் இடிந்து விழுந்தது.
மேலும் லாரி வேகமாக வந்து மோதியதில் அப்பளம் போல் லாரி நொறுங்கியது. இதில் லாரி டிரைவர் குமார் சீட்டில் உட்கார்ந்த நிலையிலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் வேறு எந்த வாகனமும் அந்த நேரத்தில் வரவில்லை.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான டிரைவர் குமார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இடிந்துபோன நகராட்சி ஸ்தூபியை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள். காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட ஸ்தூபி முற்றிலும் இடிந்து விழுந்ததால் கோபி நகர மக்களை இது வருத்தம் அடைய வைத்துள்ளது.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஆஸ்பத்திரி ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது35). ராஜீவ்காந்தி கவுந்தப்பாடியில் உள்ள தனியார் வீட்டு வசதி கூட்டுறவு கடன் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
ராஜீவ்காந்தி கேரள பாலக்காடு கொடுவாயூரை சேர்ந்த சிவரஞ்சினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.இவர்களுக்கு ஸ்ரீதர்(5) என்ற மகனும், பிரிட்ஜிதா(2) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் ராஜீவ்காந்தி வங்கிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சிலரிடம் பணம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்கள் ராஜீவ்காந்தியிடம் பணம் கேட்டு வந்தனர்.
இது சம்பந்தமாக தலைமை அலுவலகம் ராஜீவ்காந்தியை பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 4 மாதத்திற்கு முன் சிவரஞ்சினி, ராஜீவ்காந்திடம் கோபித்து கொண்டு கேரளாவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் ராஜீவ்காந்தி கடந்த சில நாட்களாள மனதேவனையுடன் இருந்தார். நேற்று மதியம் வீட்டிற்கு வந்த ராஜீவ்காந்தி திடீரென தனது மனைவி சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜீவ்காந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவுந்தப்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பெருந்துறை:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்தவர் கதிரவன் (வயது40). டிராக்டர் புரோக்கர். டிராக்டர்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார்.
இவரது மனைவி ஈஸ்வரி (33). இவர்களுக்கு நகுலன் (12), ஜெயபாரதி(7) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஈஸ்வரி தனது 2 பிள்ளைகளை அழைத்து கொண்டு நாமக்கல்லில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
மனைவியையும் , குழந்தைகளையும் பிரியமனம் இல்லாத கதிரவன் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நாமக்கல் சென்று மனைவியிடம் சமரசம் செய்தார்.
கணவான் சமரசத்தை ஏற்று கொண்ட ஈஸ்வரி குழந்தைகளுடன் கணவருடன் செல்ல முடிவு செய்தார் .
அதன்படி அவர்கள் நேற்று இரவு ஆம்னி வேனில் நாமக்கல்லில் இருந்து பெருமாநல்லூருக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தனர்.
வேனை கதிரவன் ஓட்டி சென்றார். அவரது மனைவி , 2 குழந்தைகள் உள்பட 8 பேர் வேனில் சென்றனர்.
இன்று அதிகாலை 2.30மணியளவில் வேன் பெருந்துறை அருகே பைபாஸ் ரோட்டில் சென்ற போது நாமக்கல்லில் இருந்து செங்கல் லோடு ஏற்றி கொண்டு ஒரு லாரி கோவை நோக்கி சென்று கொண்டு இருந்தது. ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக மெதுவாக சென்று ஓரங்கட்டியது.
இந்த சமயம் பின்னால் வந்த வேன் எதிர்பாராத வகையில் லாரியின் பின்புறம் “டமார்” என்ற சத்தத்துடன் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வேனில் வந்த ஈஸ்வரி.லட்சுமி (70),சந்திரன் (54), ஆகிய 3 பேரும் சம்பவ இட த்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி பாதாபமாக இறந்தனர்.
மேலும் கதிரவன் , நகுலன், ஜெயபாரதி, மனோகரன் (27), மற்றொரு லட்சுமி (54) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
திருப்பூர் மாவட்டம் பெருமா நல்லூரை சேர்ந்தவர் கதிரவன் (வயது 40). டிராக்டர் புரோக்கர். டிராக்டர்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார்.
இவரது மனைவி ஈஸ்வா (33). இவர்களுக்கு நகுலன் (12), ஜெயபாரதி(7) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஈஸ்வரி தனது 2 பிள்ளைகளை அழைத்து கொண்டு நாமக்கல்லில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
மனைவியையும் , குழந்தைகளையும் பிரிய மனம் இல்லாத கதிரவன் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நாமக்கல் சென்று மனைவியிடம் சமரசம் செய்தார்.
கணவான் சமரசத்தை ஏற்று கொண்ட ஈஸ்வா குழந்தைகளுடன் கணவருடன் செல்ல முடிவு செய்தார் .
அதன்படி அவர்கள் நேற்று இரவு ஆம்னி வேனில் நாமக்கல்லில் இருந்து பெருமா நல்லூருக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தனர்.
வேனை கதிரவன் ஓட்டி சென்றார். அவரது மனைவி , 2 குழந்தைகள் உள்பட 8 பேர் வேனில் சென்றனர்.
இன்று அதிகாலை 2.30மணியளவில் வேன் பெருந்துறை அருகே பைபாஸ் ரோட்டில் சென்ற போது நாமக்கல்லில் இருந்து செங்கல் லோடு ஏற்றி கொண்டு ஒரு லாரி கோவை நோக்கி முன்னால் சென்று கொண்டு இருந்தது.
முன்னால் சென்ற அந்த லாரி ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக மெதுவாக சென்று ஓரங்கட்டியது.
இந்த சமயம் பின்னால் வந்த வேன் எதிர்பாராத வகையில் லாரியின் பின்புறம் “டமார்” என்ற சத்தத்துடன் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வேனில் வந்த ஈஸ்வா .லட்சுமி (70),சந்திரன் (54), ஆகிய 3 பேரும் சம்பவ இட த்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி பாதாபமாக இறந்தனர்.
மேலும் கதிரவன் , நகுலன், ஜெயபாரதி, மனோகரன் (27), மற்றொரு லட்சுமி (54) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர், திம்பம் வனப்பகுதியில் சில தினங்களாக மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான கால நிலை நிலவியது.
தற்போது திம்பம் மலைப்பாதையில் திடீரென பனிமூட்டம் காணப்படுகிறது. ஆசனூர், திம்பம் மலைக்குன்றுகளில் மேகமூட்டம் படர்ந்து வெள்ளைகம்பளம் விரித்தாற்போல் காட்சியளிக்கிறது. அங்கு காலை 7 மணிவரை இருள் சூழ்ந்தது காணப்படுகிறது.
திடீரென ஏற்பட்ட பனிப்பொழிவால் திம்பம் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர். பனிமூட்டம் திம்பம் சாலையை சூழ்ந்துகொண்டு எதிரே வாகனங்கள் தெரியாதபடி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.
கோடையில் அதிக வெப்பத்துக்கு மக்கள் சிரமத்துக்குள்ளாகிய நிலையில் திம்பம் மலைப் பாதையில் நிலவும் பனிப் பொழிவால் பயணிகள், சுற்றுலா பயணிகள் திம்பம் மலைப்பாதையில் நின்று இளைப்பாறிச் செல்கின்றனர். இயற்கை அழகை ரசித்தபடியும் செல்கிறார்கள்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 34-வது மாநில மாநாடு வருகிற மே மாதம் 5-ந்தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ளது.
இந்த மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டமும், கனிராவுத்தர்குளம் பெரியசேமூர் அனைத்து வணிகர்கள் சங்க ஆண்டு விழா கூட்டமும் ஈரோடு கனிராவுத்தர்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு விழுப்புரத்தில் வருகிற மே மாதம் 5-ந்தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில் 15 லட்சம் வணிகர்கள் கலந்துகொள்வார்கள். ஈரோடு மாவட்டத்தில் இருந்து 15 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு சேவை வரி சட்டத்தை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் சாமானிய வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். 5 ஆண்டுகளில் 5 லட்சம் சிறு வணிகர்கள் காணாமல் சென்றுவிடுவார்கள். இதுதொடர்பாக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
கோக்-பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை 70 சதவீதத்திற்கு மேல் குறைந்து உள்ளது. பல ஊர்களில் வெளிநாட்டு குளிர்பானங்கள் இல்லாதநிலை உருவாகி உள்ளது. பொதுமக்களும் வெளிநாட்டு குளிர்பானங்களை தவிர்க்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இடைத்தேர்தலினால் ஆர்.கே.நகர் தொகுதியில் அடைமழை (பணமழை) பெய்கிறது. தமிழக அரசியல் சூழ்நிலை அசாதாரண நிலையில் உள்ளது. குடிநீர் போன்ற அடிப்படை பிரச்சனைகளை பொதுமக்கள் புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் பணத்துக்காக ஓட்டை விற்பனை செய்துவிடக்கூடாது.
இவ்வாறு ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 67). தொழில் அதிபர். இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ஈரோட்டிற்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்துகொண்டு இருந்தார். ரெயிலில் பாலகிருஷ்ணன் குளிர்சாதன (ஏ.சி.) பிரிவு பெட்டியில் பயணம் செய்தார்.
அந்த ரெயில் வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையத்தை தாண்டியதும் பாலகிருஷ்ணன் தான் கொண்டு வந்த பணப்பையை அருகில் வைத்துக்கொண்டு தூங்கினார். அந்த பையில் ரூ.57 ஆயிரம் இருந்தது.
இந்தநிலையில் ஜோலார்பேட்டை அருகே ரெயில் வந்தபோது பாலகிருஷ்ணன் கண்விழித்து பார்த்தார். அப்போது அவருக்கு அருகில் இருந்த பணப்பை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பாலகிருஷ்ணன் தூங்கிக்கொண்டு இருந்தபோது பணப்பையை யாரோ மர்ம நபர் திருடிவிட்டது தெரியவந்தது.
நேற்று அதிகாலை பாலகிருஷ்ணன் ஈரோடு ரெயில் நிலையத்தில் வந்து இறங்கினார். உடனே ரெயில் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று அவர் புகார் கொடுத்தார். திருட்டு நடந்த சம்பவம் காட்பாடி பகுதி என்பதால் ஈரோடு ரெயில்வே போலீசார் பாலகிருஷ்ணனின் புகாரை காட்பாடிக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு:
ராசிபுரத்தில் இருந்து கோவைக்கு ஒரு அரசு பஸ் சென்றது. அந்த பஸ் ஈரோடு பஸ் நிலையத்தில் சிறிது நேரம் நின்று விட்டு பயணிகளை ஏற்றி கொண்டு புறப்பட்டு சென்றது.
அப்போது பஸ்சில் ஒரு இளம்ஜோடி ஏறியது. இந்த ஜோடி இடது பக்கம் உள்ள இருவர் உட்காரும் சீட்டில் அமர்ந்து கொண்டனர். பஸ் புறப்பட்டதில் இருந்து இருவரும் சிரித்து... சிரித்து பேசி ஒருவர் மீது ஒருவர் விழுந்து மகிழ்ந்தப்படி வந்தனர்.
பஸ்சில் கூட்டம் அதிகம் இல்லாததால் அவர்களுக்கு மேலும் குஷியை ஏற்படுத்தியது. ஜன்னல் ஓரத்தில் உடகார்ந்திருந்த பெண்ணின் தலை முடி காற்றில் பறந்தது. இதை அருகே இருந்த வாலிபர் கவனித்து முடியை கோதி விட்டு கொண்டே இருந்தார். பதிலுக்கு அந்த பெண் வாலிபர் கன்னத்தில் மொட்டுகள் போல இருந்த வியர்வை துளிகளை தனது சேலையால் துடைத்தார். திடீரென அந்த வாலிபர் அந்த பெண்ணின் கன்னத்தில் முத்தமிட... பதிலுக்கு அந்த இளம் பெண்ணும் முத்தமிடவும் அந்த பஸ் காதல் வாகனமாக மாறி விட்டது.
இதை நோட்டமிட்டபடி பார்த்த பயணிகள் சிலர் முகம் சுழித்தனர். ‘‘இவர்கள் புதுமண தம்பதியாகவே இருக்கட்டும் அதற்காக ஓடும் பஸ்சில் இப்படியா கொஞ்சி குலாவுவது...? இது அநாகரீகமாக இல்லையா...? என்று பயணிகள் முணு முணுத்தனர்.
பஸ் அவினாசி சென்றதும் 10 நிமிடம் அந்த பெண் வாலிபர் மடியில் படுக்க அடுத்த 10 நிமிடம் அந்த இளம்பெண் மடியில் வாலிபர் படுத்து கொள்ள இந்த காதல் லீலைகளை ஒரு சில பயணிகள் ரசித்தப்படியே வந்தனர்.






