என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுந்தப்பாடியில் பரிதாபம் தனியார் வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்க மேலாளர் தற்கொலை
    X

    கவுந்தப்பாடியில் பரிதாபம் தனியார் வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்க மேலாளர் தற்கொலை

    கவுந்தப்பாடியில் கடன் பிரச்சனையில் தனியார் வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்க மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஆஸ்பத்திரி ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது35). ராஜீவ்காந்தி கவுந்தப்பாடியில் உள்ள தனியார் வீட்டு வசதி கூட்டுறவு கடன் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

    ராஜீவ்காந்தி கேரள பாலக்காடு கொடுவாயூரை சேர்ந்த சிவரஞ்சினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.இவர்களுக்கு ஸ்ரீதர்(5) என்ற மகனும், பிரிட்ஜிதா(2) என்ற மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் ராஜீவ்காந்தி வங்கிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சிலரிடம் பணம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்கள் ராஜீவ்காந்தியிடம் பணம் கேட்டு வந்தனர்.

    இது சம்பந்தமாக தலைமை அலுவலகம் ராஜீவ்காந்தியை பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 4 மாதத்திற்கு முன் சிவரஞ்சினி, ராஜீவ்காந்திடம் கோபித்து கொண்டு கேரளாவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனால் ராஜீவ்காந்தி கடந்த சில நாட்களாள மனதேவனையுடன் இருந்தார். நேற்று மதியம் வீட்டிற்கு வந்த ராஜீவ்காந்தி திடீரென தனது மனைவி சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜீவ்காந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து காவுந்தப்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×