என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே சர்க்கரை நோய் வந்ததால் குடும்பமே இறந்த பரிதாபம்

- சிறுவயதிலேயே 2 மகள்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதால் கணவன்-மனைவி மனம் உடைந்தனர்.
- பின்னர் கணவன்-மனைவி 2 பேரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
அந்தியூர்:
சேலம் தாதகாப்பட்டி நெசவாளர் காலனியை சேர்ந்தவர் யுவராஜ் (42). இவரது மனைவி மான்விழி (35). இவர்கள் 2 பேரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தனர். இவர்களுக்கு நிதிஷா என்கிற நேகா (7), அக்ஷரா (5) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில் இவர்களது மூத்த மகள் நேகா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சிறுமிக்கு தினமும் இன்சுலின் ஊசி செலுத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் 2-வது மகள் அக்ஷராவுக்கும் சர்க்கரை நோய் வந்து விட்டது.
சிறுவயதிலேயே 2 மகள்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதால் கணவன்-மனைவி மனம் உடைந்தனர். இதையடுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கடிதம் எழுதி வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் யுவராஜ் தனது மனைவி மான்விழி, மகள்கள் நேகா, அக்ஷரா ஆகியோருடன் வீட்டை விட்டு புறப்பட்டார்.
பின்னர் அவர்கள் தமிழக-கர்நாடக எல்லையான ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே உள்ள பாலாற்றின் நீர்தேக்க பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு 2மகள்களையும் பாலாற்றில் தூக்கி வீசினர். இதில் 2மகள்களும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
பின்னர் கணவன்-மனைவி 2 பேரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் 2 குழந்தைகளுக்கும் சிறுவயதிலேயே சர்க்கரை நோய் வந்ததால் மனம் உடைந்த கணவன், மனைவி 2 குழந்தைகளையும் ஆற்றில் தூக்கி வீசி கொலை செய்து விட்டு பின்னர் அவர்களும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் தற்கொலைக்கு முன்பு அவர்கள் ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்தனர். இதில் 2 குழந்தைகளுக்கும் சர்க்கரை வியாதி வந்ததால் எங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மேலும் 2 குழந்தைகளையும் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே இந்த உலகில் வாழ எங்களுக்கு விருப்பம் இல்லை.
எங்களை மன்னித்து விடுங்கள். இதை தவிர வேறு எந்த காரணமும் இல்லை. மிகுந்த மன வேதனையோடு தான் நாங்கள் 2 பேரும் இந்த முடிவை எடுத்தோம். அனைவரும் எங்களை மன்னிக்கவும் என்று எழுதப்பட்டு இருந்தது
இதற்கிடையே 4 பேரின் உடல்களும் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இதனால் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் அவர்களது உறவினர்கள் அதிகளவில் திரண்டு இருந்தனர். குழந்தைகளுக்கு ஏற்பட்ட சர்க்கரை வியாதியால் குடும்பமே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
