என் மலர்
உள்ளூர் செய்திகள்

மர்ம விலங்கு கடித்து நாய் பலி
- திகினாரை அருகே உள்ள ரங்கசாமி கோவில் அருகில் மானாவாரி நிலத்தில் மர்ம விலங்கு கடித்து நாய் ஒன்று இறந்து கிடந்தது.
- இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்கு அவ்வப்போது விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், கால்நடைகளை வேட்டையாடி வருவதும் தொடர்கதை ஆகிய வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட திகினாரை அருகே உள்ள ரங்கசாமி கோவில் அருகில் மானாவாரி நிலத்தில் மர்ம விலங்கு கடித்து நாய் ஒன்று இறந்து கிடந்தது. இது பற்றி ஜீர்கள்ளி வனத்துறைக்கு அப்பகுதி விவசாயிகள் தகவல் அளித்தனர்.
இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய் இதே பகுதியில் மர்ம விலங்கு கடித்து உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது. புலி அல்லது சிறுத்தை வனப்பகுதியில் இருந்து வந்து நாயை வேட்டையாடி இருக்கலாம் என விவசாயிகள் கருதுகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.






