search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் குழந்தை என்பதால் தாயே அடித்து கொன்றது அம்பலம்
    X

    கைதான சகுந்தலாதேவி.

    பெண் குழந்தை என்பதால் தாயே அடித்து கொன்றது அம்பலம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குழந்தை இறந்து விட்டதாக அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தனர்.
    • குழந்தையின் தலையை அமுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (30). இவரது மனைவி சகுந்தலா தேவி (21). இவர்களுக்கு 3½ வயதில் மகாஸ்ரீ என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் சகுந்தலா தேவி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி 2-வதாக மீண்டும் ெபண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 9-வது நாளான கடந்த 27.4.2023-ந் தேதி காலை சகுந்தலா தேவி குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தூங்க வைத்து விட்டு வெளியே வந்தார்.

    பின்னர் வீட்டு வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்குள் சென்ற போது குழந்தை இறந்து விட்டதாக அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு பெண் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் தலையில் உள்பக்கம் காயம் இருப்பது தெரியவந்தது. எனவே குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் மீண்டும் குழந்தையின் தாய் சகுந்தலா தேவியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது 2-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் குழந்தையின் தலையை அமுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சகுந்தலாதேவியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×