என் மலர்
உள்ளூர் செய்திகள்

லைவ் அப்டேட்ஸ்: ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள்... ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
- வாக்கு எண்ணிக்கையின் துவக்கம் முதலே இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. மொத்தம் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. துவக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வாக்கு வித்தியாசம் அதிகமாகிக்கொண்டே சென்றது. இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவும், மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனும் பின்தங்கினர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார்.
Live Updates
- 2 March 2023 11:58 AM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- 2 March 2023 11:56 AM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- 5ம் சுற்று முடிவில் 39,855 வாக்குகளை பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை.
- 2 March 2023 11:55 AM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியின் பெருமை முதலமைச்சரையே சேரும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டசபையில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது என காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
- 2 March 2023 11:35 AM IST
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 31,928 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.







