என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெல்லாரம்பள்ளி அரசு பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்
- ஜூன்.19- போதிய நாற்காலி வசதிகள் இல்லாததால், கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம் மேசை, நாற்காலி கேட்டு மனு அளித்திருந்தனர்.
- கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரம் மாணவ, மாணவிகள் அமரக்கூடிய வகையில் 250 செட் மேசை, நாற்காலிகளை அரசுப் பள்ளிக்கு வழங்கி உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம் பெல்லாரம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் 174 மாணவ, மாணவிகள் கல்வி படித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு வகுப்பறையில் அமர்ந்து படிக்க போதிய நாற்காலி வசதிகள் இல்லாததால், கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம் மேசை, நாற்காலி கேட்டு மனு அளித்திருந்தனர்.
அதன்படி, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 35 செட் மேசை, நாற்காலிகளை எம்.எல்.ஏ., அசோக்குமார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
மேலும், கடந்த ஆண்டு பொது நிதியில் கட்டப்பட்ட சமையல் அறையையும் திறந்து வைத்தார்.
இந்த ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், பள்ளியின் தலைமை ஆசிரியர் மலர்கொடி, பெற்றோர் சங்கத் தலைவர் கலையரசன், ஊராட்சி மன்ற தலைவர் முருகம்மாள் சக்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன், முன்னாள் துணைத் தலைவர் சித்ரா சிவராஜ், சோக்காடி ஊராட்சி தலைவர் கொடிலா ராமலிங்கம், துணைத் தலைவர் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரம் மாணவ, மாணவிகள் அமரக்கூடிய வகையில் 250 செட் மேசை, நாற்காலிகளை அரசுப் பள்ளிக்கு வழங்கி உள்ளதாக அசோக்குமார் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.






