search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வத்தலக்குண்டுவில் துப்புரவு பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள்
    X

    துப்புரவு பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள் வழங்கப்பட்டது.

    வத்தலக்குண்டுவில் துப்புரவு பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள்

    • வத்தலக்குண்டுவில் துப்புரவு பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள் வழங்கப்பட்டது

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ஈடன் கார்டன் லயன்ஸ் கிளப் சார்பாக வத்தலக்குண்டு பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இரும்பு தட்டு, மண்வெட்டி உள்பட சுகாதார தளவாடபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு லயன்ஸ் கிளப் தலைவர் பாக்யராஜ் தலைமை வகித்தார்.

    செயலாளர் கஸ்தூரிராஜா, பொருளாளர் சீனிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வத்தலகுண்டு பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ், தி.மு.க. நகர செயலாளர் சின்னதுரை, பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், சிவா, மகாமுனி, அழகுராணி மற்றும் லயன்ஸ் கிளப் டாக்டர் அண்ணாதுரை, நிர்வாகிகள் செந்தில்குமார், ஆண்டவர், முரளி, சக்திவேல் ,நாகேந்திரன், பேரூராட்சி மேஸ்திரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×