என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்குவாரிக்குள் புகுந்து தாக்குதல்- சீமான் உள்ளிட்ட 75 பேர் மீது சங்கரன்கோவில் போலீசார் வழக்கு
    X

    கல்குவாரிக்குள் புகுந்து தாக்குதல்- சீமான் உள்ளிட்ட 75 பேர் மீது சங்கரன்கோவில் போலீசார் வழக்கு

    • சீமான் கட்சியினர் கல்குவாரிக்குள் புகுந்து அங்கிருந்த ஒருவரை தாக்கியதாக புகார் எழுந்தது.
    • குவாரி ஊழியர் சண்முகசாமி கொடுத்த புகாரின் பேரில் 75 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் செய்தார். கடந்த 16-ந் தேதி அவரும், அவரது கட்சியினரும் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் திடீரென ஆய்வு செய்வ தற்காக சென்றதாகவும், அப்போது கட்சியினர் கல்குவாரிக்குள் புகுந்து அங்கிருந்த ஒருவரை தாக்கியதாக புகார் எழுந்தது.

    இதுகுறித்து குவாரி ஊழியரான சண்முகசாமி கொடுத்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணை ப்பாளர் சீமான் உள்ளிட்ட 75 பேர் மீது சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×