search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமிப்பை அகற்றி கோயம்பேடு மார்க்கெட்டில் வசதியை மேம்படுத்த வேண்டும்- வியாபாரிகள் வலியுறுத்தல்
    X

    ஆக்கிரமிப்பை அகற்றி கோயம்பேடு மார்க்கெட்டில் வசதியை மேம்படுத்த வேண்டும்- வியாபாரிகள் வலியுறுத்தல்

    • நீண்ட காலமாக இருந்து வந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது.
    • கழிப்பிடங்களில் கழிவறைகள் புதிதாக மாற்றப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சென்னை கோயம்பேட்டில் காய்கறி, பூ, பழம் மொத்த மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுவதால் தினமும் சென்னையை சுற்றியுள்ள பகுதி வியாபாரிகள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். பொது மக்களும் நேரடியாக சென்று காய்கறி, பழங்கள் வாங்குகின்றனர். மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை என்ற புகார் இருந்தது.

    நீண்ட காலமாக இருந்து வந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன் கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி நிர்வாகத்திடம் வலியுறுத்திய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

    போக்குவரத்து சீர்செய்யப்படவில்லை, கழிப்பிட, குடிநீர் வசதி போன்றவை செய்து தர வேண்டும் லைசென்சு பெறாமல் சிலர் கடை நடத்தி வருவதாகவும் ஒரு சிலர் குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாக கடைகளை அமைத்து இடையூறு செய்வதாகவும் அதனை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார்.

    இதுகுறித்து மார்க்கெட் கமிட்டி அதிகாரி சாந்தி கூறியதாவது:

    மார்க்கெட்டில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. சர்வீஸ் சாலை சரி செய்யப்படுகிறது. பூ மார்க்கெட்டில் குளம் சீரமைக்கப்படுகிறது. கழிப்பிடங்களில் கழிவறைகள் புதிதாக மாற்றப்பட்டு வருகின்றன. பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறாக உள்ள சாலையோர கடைகளை அகற்றி வருகிறோம். தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட் நவீனப்படுத்தும் நடவடிக்கை தொடங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×