என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் வரிசையாக நின்று வாக்களித்தபோது எடுத்த படம்.
கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல்
- அனைத்து மாண வர்களும் கலந்துக்கொண்டு தங்கள் உரிமையை உணர்ந்து வாக்களித்தனர்.
- பள்ளி மாணவ, மாணவியரின் தலைவர், துணை தலைவர், அணித்தலைவர்கள், அணி துணைத் தலைவர்களுக்கான தேர்தல் நடைப்பெற்றது.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் தேர்தலின் அவசியம், விழிப்புணர்வு மற்றும் தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாக ஆண்டு தோறும் மாணவ தேர்தல் நடைப்பெறும்.
இந்த ஆண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. நேற்று பள்ளி மாணவ, மாணவியரின் தலைவர், துணை தலைவர், அணித்தலைவர்கள், அணி துணைத் தலைவர்களுக்கான தேர்தல் நடைப்பெற்றது.
இதில் அனைத்து மாண வர்களும் கலந்துக்கொண்டு தங்கள் உரிமையை உணர்ந்து வாக்களித்தனர். இத்தேர்தலின் சிறப்பு விருந்தினராக பள்ளியின் தாளாளர் வேடியப்பன் மற்றும் சாந்தி வேடியப்பன், பள்ளியின் நிர்வாக இயக்குநர்கள் தமிழ்மணி மற்றும் பவானி தமிழ்மணி பங்கேற்றனர்.
முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான்இருத யராஜ், வெற்றி வேல், ஒருங்கிணைப்பாளர்கள் குருமூர்த்தி, புவனேஷ்வரி, மணிமேகலை, பிரவீணா ஆகியோர் மாணவர்களுக்கு வாக்களித்து தேர்தல் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இவ்விழாவினை சமூக அறிவியல் துறை ஆசிரியர்கள் சதீஷ், முத்துசெல்வி, பிரபாவதி, ஷேனு, விக்னேஷ் மற்றும் ஆகாஷ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.






