என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய நிர்வாகிகள் தேர்வு
- நூலகத்துறை அலுவலர் ஒன்றியத்தில் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது.
- செயலாளராக சண்முகம், பொருளாளராக செல்வராஜ் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட நூலக வளாகத்தில் பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியத்தில் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது.
தேர்தல் அலுவலர்களாக கார்த்திகேயன், துணைத்தலைவர் முத்துகுமரன் ஆகியோர் செயல்பட்டனர். தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவராக சீனிவாசன், செயலாளராக சண்முகம், பொருளாளராக செல்வராஜ் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாநில பொதுசெயலாளர் கணேசன், இணைச்செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை விளக்கவுரை ஆற்றினர். ஊர்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story






