என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ் மோதி முதியவர் பலி
- அந்த வழியாக வந்த டவுன் பஸ் சக்கரம் இவரது கையின் மீது ஏறியதில் பலத்த காய மடைந்தார்.
- சிகிச்சை பெற்று வந்த ரங்கராஜ் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி கந்தசாமி வாத்தியார் தெரு பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 89).
இவர் பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த டவுன் பஸ் சக்கரம் இவரது கையின் மீது ஏறியதில் பலத்த காய மடைந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் உடனே இவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த ரங்கராஜ் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story