search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்- நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட தேவாலயங்களில்  சிறப்பு பிரார்த்தனை
    X

    தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் கிறிஸ்தவ மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட காட்சி.

    ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்- நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

    • கடந்த பிப்ரவரி 22-ந்தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தவக்காலம் தொடங்கியது.
    • பனிமய மாதா பேராலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்துரூபமாக நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாள் தவக்காலம் அனுசரிக்கின்றனர்.

    இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி 22-ந்தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது. இயேசு உயிர் துறந்த புனித வெள்ளி நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்ததை கொண்டா டும் ஈஸ்டர் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாப்பட்டது.

    தூத்துக்குடி

    ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்துரூபமாக நடைபெற்றது. பின்னர் பங்குத்தந்தை குமார்ராஜா தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்ளில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு கத்தோலிக்க ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் சி.எஸ்.ஐ. ஆலயங்களில் இன்று அதிகாலை ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனையும், திருவிருந்து ஆராதனையும் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஈஸ்டர் பண்டிகையை யொட்டி நேற்று இரவு 11.30 மணிக்கு தூய சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகாலையில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பெருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்றது. பாவூர்சத்திரம் சி.எஸ்.ஐ . ஆலயத்தில் சேகர குருவானவர் டேனியல் தனசன் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனை நடத்தினார்.

    அனைவருக்கும் கேக் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதேபோல் பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் தேவாலயத்தில் பங்கு தந்தை ஜேம்ஸ் அடிகளார் சிறப்பு திருப்பலி நடத்தினார். இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    புனித லூர்து அன்னை

    தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை இன்று காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டனி தலைமையில் பங்குத் தந்தை ஆன்றனி புருனோ பெருவிழா திருப்பலி நிறைவேற்றினார். இதில் இயேசு உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நடைபெற்றது. அப்போது, கிறிஸ்துவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, இயேசு பிறப்பை வரவேற்றனர். இதில் ஆயிரக்கணக்காக கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

    புனித லூர்து அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றபோது எடுத்த படம்.



    Next Story
    ×