என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுதல் கட்டணம் வசூலித்த இ-சேவை மையம் உரிமம் ரத்து
    X

    கோப்பு படம்

    கூடுதல் கட்டணம் வசூலித்த இ-சேவை மையம் உரிமம் ரத்து

    • பழனியில் இ-சேவை மையத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்ததால் உரிமம் ரத்து செய்யப்பட்டது
    • கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

    திண்டுக்கல்:

    பழனி டவுன் பகுதியில் இயங்கி வந்த தனியார் இ-சேவை மையத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட மாற்றுத்திறனாளியிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக மாவட்ட கலெக்டர் விசாகனுக்கு புகார் வந்தது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.

    விசாரணையில் அங்கு கூடுதலாக சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.

    இதனைதொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் இ-சேவை மைய உரிமம் ரத்து செய்யப்பட்டது. இ-சேைவ மையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடம் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் மட்டுமே வசூலிக்கவேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×