search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை ஓய்ந்ததால் பெரியாறு, வைகை அணைக்கு நீர்வரத்து சரிவு
    X
    முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)

    மழை ஓய்ந்ததால் பெரியாறு, வைகை அணைக்கு நீர்வரத்து சரிவு

    • வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
    • தற்போது மழை ஓய்ந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. வைகை அணை அதன் முழுகொள்ளளவை எட்டி கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 138.30 அடியாக உள்ளது. 814 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 69.52 அடியாக உள்ளது. 929 கனஅடிநீர் வருகிறது. 1569 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 132 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.38 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 52 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.மழை எங்கும் இல்லை.

    Next Story
    ×