என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடும் பனிப்பொழிவால்எலுமிச்சை விலை தொடர்ந்து சரிவு
- தற்போது எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்துள்ளது.
- கோடைகாலம் தொடங்க உள்ளதால், எலுமிச்சை பழத்துக்கு தேவை அதிகரிக்கும்.
தருமபுரி,
கடும் பனிப்பொழிவால், எலுமிச்சை பழத்துக்கு விற்பனையின்றி விலை குறைந்துள்ளது.
இதனால், கோடையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.தருமபுரி மாவட்டத்தில் எலுமிச்சை பழம் விளைச்சல் அதிகள வில் இல்லை.
இதனால், திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்ட ங்களில் இருந்தும், கர்நாடகா, பிஜப்பூர், ஆந்திரா மாநிலங்களில் இருந்து எலுமிச்சை பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் 50 கிலோ கொண்ட, ஒரு மூட்டை ரூ.3,000 முதல் ரூ. 4,000 வரை விற்றது. இந்நிலையில் தற்போது எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை 2,000 ரூபாய் முதல் 2,200 ரூபாய் வரை விற்பனையாகிறது.இதுகுறித்து, எலுமிச்சை வியாபாரிகள் கூறியதா வது:-
கடந்த 2 மாதங்களாக கடும் பனிப்பொழிவு உள்ள தால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும், எலுமிச்சை பழத்துக்கு தேவை குறைந்துவிட்டது.
இதனால், எலுமிச்சை விலை பல மடங்கு குறைந்துள்ளது. விரைவில் கோடைகாலம் தொடங்க உள்ளதால், எலுமிச்சை பழத்துக்கு தேவை அதிகரிக்கும். அப்போது, விலை உயர வாய்ப்புண்டு.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.