என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான வாலிபரையும், பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களையும் காணலாம்.
அரூரில் ரூ.2,25,000 மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் -ராஜஸ்தான் மாநில வாலிபர் கைது
- 323 கிலோ எடைகொண்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அரூர்,
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா,பான் மசாலா இவற்றை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் அரூர் மேல்பாட்ஷா பேட்டை மேட்டுபட்டி பகுதியில் குடியிருக்கும் பாபுலால் மகன் மகேந்திரகுமார் (வயது 23) என்பவர் பெங்களூர் பகுதியில் இருந்து போதை புகையிலை பொருட்களை கடத்தி வந்து அரூர் நகரம் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் பெனாசீர் பாத்திமா தலைமையிலான காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது குடோனில் சாக்கு மூட்டையில் மறைத்து வைத்திருந்த ரூ.2,25,929 லட்சம் மதிப்புள்ள 323 கிலோ எடைகொண்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மகேந்திரகுமார்மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுபோன்று அரூர் காவல் உட்கோட்டத்தில் யாரேனும் சட்டவிரோதமாக போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் ஈடுபட்டால் அவர்கள் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணை கண்காணிப்பாளர் பெனாசீர் பாத்திமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.






