search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்- கனிமொழி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    X

    கனிமொழி எம்.பி. போட்டிகளை தொடங்கி வைத்த காட்சி. அருகில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி.

    தூத்துக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்- கனிமொழி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    • தூத்துக்குடியின் மாரத்தான், வாக்கத்தான் போட்டிகள் நடைபெற்றது.
    • போட்டியில் நிபந்தனைகளுக்கு உட்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பன்னாட்டு ஜூனியர் சேம்பர், தூத்துக்குடி ஹெர்குலேனியம் எலைட் இணைந்து 'போதைப் பொருள் எனக்கும் வேண்டாம் நமக்கும் வேண்டாம்' என்ற தலைப்பில் நம்ம தூத்துக்குடியின் பெருநடை என்ற பெயரில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் இன்று நடை பெற்றது. இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு போட்டிகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போட்டியில் நிபந்தனை களுக்கு உட்பட்ட ரூ. ஒரு லட்சம் அளவிலான பரிசுகளும், பதிவு செய்த அனைவருக்கும் டீ சர்ட், பதக்கம், சான்றிதழ், கிட்பேக் மற்றும் குளிர் பானங்கள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×