என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  டிரைவர்-தொழிற்சங்க நிர்வாகி இடையே அடிதடி
  X

  பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் தொழிற்சங்க நிர்வாகிக்கும், ஓட்டுனர் ஒருவருக்கும் நடந்த கைகலப்பு காட்சி.

  டிரைவர்-தொழிற்சங்க நிர்வாகி இடையே அடிதடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஓட்டுநர்களிடம் பணி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறப்படுகிறது.
  • வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டு சண்டையானது.

  பாலக்கோடு,

  தருமபுரி மாவட்டம் பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் இருந்து நகர மற்றும் புறநகர் பேருந்துகள் என சுமார் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நாள் ஒன்றுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

  போக்குவரத்து பணிமனையில் தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் சென்னை, கோவை, பழனி மற்றும் நீண்ட தூரம் செல்லும் புறநகர் பேருந்து ஓட்டுநர்கள், ஒரு குறிப்பிட்ட வழிதடத்தில் செல்லும் நகர பேருந்து ஓட்டுநர்களிடமும் பணி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் ஓட்டுனர் ராஜா என்பவருக்கு பணி வழங்காமல் காத்திருப்பில் வைத்திருந்ததாகவும், பின்னர் அந்த பணியை வேறு ஒருவருக்கு ஓதிக்கியதாகவும் கூறப்படுகிறது.

  இந்நிலையில் தொழிற்சங்க நிர்வாகிக்கும், ஓட்டுநர் ராஜா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டு சண்டையிட்டு கொள்ளும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×