என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிரைவரை கட்டி போட்டு லாரி கடத்தல்
    X

    டிரைவரை கட்டி போட்டு லாரி கடத்தல்

    • போலீசார் ேதடுவதை அறிந்த திருடர்கள் லாரியை காவல் நிலையம் அருகே ரோட்டில் நிறுத்தி நெல் மூட்டைகள் பாதிக்கு மேல் எடுத்து சென்று ள்ளனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள எச்.அக்ரகாரம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் 25 ஆண்டுகளாக அரூரில் நெல் வியாபாரம் செய்து வருகிறார்.

    அவரது ஓட்டுநர் கிருஷ்ணன் திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி பகுதியிலிருந்து 230 நெல் மூட்டைகளை விலைக்கு வாங்கி லாரியில் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது நரிப்பள்ளி சோதனை சாவடியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் லாரியை வழி மறித்துள்ளனர். பின்னர் ஓட்டுநர் கிருஷ்ணனை அடித்து துன்புறுத்தி கட்டி போட்டு விட்டு லாரியை கடத்தி சென்றனர்.

    இது குறித்து கோட்டப்பட்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தேடி வந்தனர்.

    போலீசார் ேதடுவதை அறிந்த திருடர்கள் லாரியை கோட்டப்பட்டியில் காவல் நிலையம் அருகே ரோட்டில் நிறுத்தி நெல் மூட்டைகள் பாதிக்கு மேல் எடுத்து சென்று ள்ளனர்.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×