என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூளகிரி வழியாக கர்நாடகாவிற்கு லாரியில் கொண்டு சென்ற டிரைவர் கைது
- கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய லாரி சிக்கியது.
- டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு தலைமையில் கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் கவாஸ்கர், வருவாய் ஆய்வாளர் சதீஷ், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர்தென்னரசு மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சூளகிரி அடுத்த சப்படி வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தினார்கள். அதில் 50 கிலோ அளவிலான 396 மூட்டைகளில் 19 ஆயிரத்து 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம் சோமனஹள்ளியை சேர்ந்த மணிவண்ணன்(23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் ஈரோடு, பெருந்துறை பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கர்நாடகாவில் அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்றது தெரிந்தது. ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.






