என் மலர்
உள்ளூர் செய்திகள்

3 நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படும் குடி நீர்
- குடிநீர் முறையாக வழங்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனா்.
தருமபுரி,
தருமபுரி நகராட்சிக்குட்பட்ட 32-வது வார்டு அன்னசாகரம் தீத்தி அப்பாவு தெருவில் கடந்த இரண்டு வாரங்களாக குடிநீர் முறையாக வழங்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தருமபுரி நகராட்சியில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அவ்வாறு வினியோகிக்கப்படும் குடிநீா் தெருக்களின் கடைசி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை.
இரு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிதண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது ஒகேனக்கல்லில் இருந்து தேவையான குடிநீர் கிடைத்தும் தருமபுரி நகராட்சி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனா்.
தருமபுரி நகராட்சிக்கு தண்ணீர் வழங்கும் பஞ்சப்பள்ளி அணையிலிருந்து உபரி நீர் வெளியேறி வரும் சூழ்நிலையில் குடிக்கும் குடி தண்ணீர் கூட முறையாக வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அனைத்து பொதுமக்களுக்கும் குடிதண்ணீா் செல்லும் வகையில் குடி தண்ணீா் வழங்கும் நேரத்தை அதிகரித்து குடிநீா் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.






