search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடியில் குடிமகன்களின் கூடாரமான விளையாட்டு மைதானம்
    X

    விளையாட்டு மைதானத்தில் குடிமகன்கள் விட்டுச் சென்ற மதுபாட்டில்கள்.

    போடியில் குடிமகன்களின் கூடாரமான விளையாட்டு மைதானம்

    • இந்த விளையாட்டு மைதானம் பயனற்று போகும் வகையில் மது பிரியர்களின் திறந்த வெளி பாராகவும், கஞ்சா மற்றும் போதைப்பொருள் உபயோகிப்பவர்கள், சமூக விரோதிகளின் சமுதாய கூடமாகவும் மாறியுள்ளது.
    • எனவே இப்பகுதியில் போதிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகரில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது சிட்னி விளையாட்டு மைதானம். போடி நகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த மைதானத்தில் காலையும் மாலையும் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் உள்ளே கூடை பந்து மைதானம், கால்பந்து மைதானம், ஹாக்கி பயிற்சி மேற்கொள்பவர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். மாவட்ட மற்றும் மாநில அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் இங்கு நடத்தப்பட்டு வருகிறது.

    ஆண்களுக்கான உடற்பயிற்சி கூடமும் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடமும் உள்ள விளையாட்டு அரங்கமும் தலா ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

    ஆனால் தற்போது இவை அனைத்தும் பயனற்று போகும் வகையில் இந்த மைதானம் மது பிரியர்களின் திறந்த வெளி பாராகவும், கஞ்சா மற்றும் போதைப்பொருள் உபயோகிப்பவர்கள், சமூக விரோதிகளின் சமுதாய கூடமாகவும் மாறியுள்ளது.

    பகலிலேயே போதை வஸ்துகளை உபயோகிப்பவர்கள் இங்கு போதைப் பொருள்களை உபயோகித்து இங்கேயே படுத்து கிடக்கின்றனர். இரவு நேரங்களில் இங்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாகவும் மாறியுள்ளது.

    மேலும் இந்த மைதானம் போடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த மைதானத்தைச் சுற்றிலும் ஏலக்காய் சுத்தப்படுத்தும் தொழில் நடைபெறுவதால் ஏலக்காய் சுத்தம் செய்யும் வேலைக்குசெல்லும் பெண்களும் வேலைக்கு சென்று வீடு திரும்புவதில் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    எனவே இப்பகுதியில் போதிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×