என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம்-ஓமலூர் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்
- சேலம் ரெயில்வே கோட்டத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்து அதிகம் உள்ள வழித்தடங்களில் ஒன்றாக சேலம் மேட்டூர் ரெயில் பாதை உள்ளது.
- இந்த நிலையில் சேலம் ஓமலூர் இடையே 11 கிலோமீட்டர் நீளத்திற்கு ஈரோட்டில் ரெயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
சேலம்:
சேலம் ரெயில்வே கோட்டத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்து அதிகம் உள்ள வழித்தடங்களில் ஒன்றாக சேலம் மேட்டூர் ரெயில் பாதை உள்ளது. மேட்டூரில் உள்ள தொழிற்சா லைகளுக்கு தேவையான கச்சா பொருட்கள், மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு தேவைப்படும் நிலக்கரி உள்ளிட்டவை கொண்டு வருவதற்கும் மேட்டூரில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லவும் சேலம் மேட்டூர் ரெயில்வே வழித்தடம் பயனுள்ளதாக உள்ளது .
சேலம் மேட்டூர் வழித்தடத்தில் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க வசதியாக இந்த பாதையை இரட்டை வழித்தடமாக மாற்றும் பணி கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது .அதில் சேலம் ஓமலூர் மற்றும் ஓமலூர்-மேட்டூர் இடையே என இரண்டு பிரிவுகளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முதல் கட்டமாக மேட்டூர் ஓமலூர் இடையே இரட்டை பாதை அமைக்கப்பட்டு ரெயில் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில் சேலம் ஓமலூர் இடையே 11 கிலோமீட்டர் நீளத்திற்கு ஈரோட்டில் ரெயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இந்த பணி ரூ. 40 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் நிலையில் மின்சார பாதை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓமலூர்-மேட்டூர் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டு முடிவற்ற நிலையில் சேலம் ஜங்ஷனுடன் ஓமலூர் இரட்டை ரெயில் பாதையை இணைக்கும் வகையில் பணிகள் நிறைவு நிலைக்கு நெருங்கி வருகிறது.பெருமளவு பணிகள் முடிவடைந்துள்ளதால் வரும் அக்டோபர் மாதத்திற்குள் ஒட்டுமொத்த பணிகளும் நிறைவடையும். அதன்பின்னர் சேலம்-ஓமலூர் மேட்டூர் இடையே மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரெயில் பாதையில் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






