search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உரிமம் பெறாத நாற்று பண்ணைகளில் நெல், காய்கறி நாற்றுகள் வாங்க வேண்டாம்- அதிகாரி தகவல்
    X

    உரிமம் பெறாத நாற்று பண்ணைகளில் நெல், காய்கறி நாற்றுகள் வாங்க வேண்டாம்- அதிகாரி தகவல்

    • தமிழ்நாட்டில் தற்போது கரீப் பருவத்தில் விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்ய தயாராகி வருகின்றனர்.
    • ஆடிப்பட்டம் தேடி விதைக்க வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகள் வேளாண் பயிர்களை சாகுபடி செய்யத் தொடங்கி உள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    உரிமம் பெறாத நாற்று பண்ணைகளில் நெல் அல்லது காய்கறி நாற்றுகளை வாங்க வேண்டாம் என, தருமபுரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தற்போது கரீப் பருவத்தில் விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்ய தயாராகி வருகின்றனர். ஆடிப்பட்டம் தேடி விதைக்க வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகள் வேளாண் பயிர்களை சாகுபடி செய்யத் தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்ய, நாற்று விடும் பணிகள் நடந்து வருகிறது. நெல் நடவு செய்யும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றளிப்பு துறையின் மூலம் உரிமம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையத்திலோ விதைகளை வாங்கவும், வாங்கும்போது பருவத்திற்கு ஏற்றதா என்பதை உறுதி செய்தபின் வாங்கவும்.

    உரிமம் பெறாத எந்த ஒரு நாற்று பண்ணையிலும் நெல் அல்லது காய்கறி நாற்றுகளை வாங்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×