search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறந்த பெண்ணின் கண்கள் தானம்
    X

    பெண்ணின் கண்கள் தானமாக வழங்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இறந்த பெண்ணின் கண்கள் தானம்

    • இறந்த பின்பு கண்களை தானமாக வழங்க ஆசைப்பட்டார்.
    • கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தாலுக்கா தேசிங்குராஜபுரம் கிராமம் புதுத்தெருவில் வசித்து வந்த மறைந்த நடேசன் மனைவி சகுந்தலா அம்மையார் இறந்த பின்பு கண்களை தானமாக வழங்க ஆசைப்பட்டார்.

    அதன்படி சகுந்தலா அம்மையார் மறைந்ததும் அவரது மகன்கள் சிங்கார வேல், பழனிவேல் ஆகியோர் சகுந்தலா அம்மையார் கண்களை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மூலமாக தானம் செய்தனர்.

    அந்த கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதே பகுதியில் அஞ்சல கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பாலசுப்ரமணியன் என்பவர் கடந்த மாதம் 29 ஆம் தேதி கண்களை தானமாக வழங்கிய செய்திக் கேட்டு தானும் தானமாக கண்களை வழங்க வேண்டும் என்று சகுந்தலா அம்மையார் விருப்பம் தெரிவித்து இருந்தார்.

    அதன்படி அவரது ஆசையை அவரது குடும்பத்தினர் நிறைவேற்றினர்.

    இது பற்றி ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் கூறும்போது, இதுபோன்று இறப்பவர்கள் கண்களை தானமாக வழங்கினால் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே கண்பார்வை இல்லாதவர்களின் சதவீதம் மிகமிக வெகுவாக குறையும் என்றார்.

    அவருடைய கண்களை பெற்றுக்கொண்ட அரவிந்த மருத்துவமனை கும்பகோணம் பிரிவை சேர்ந்த ஆதிகேசவன், கண்கள் நல்ல நிலையில் இருப்பதால் நான்கு நபர் வரை இவரால் பார்வை பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    அந்தப் பகுதி மக்கள் இனி யாராவது எங்கள் பகுதியில் மறைந்தால், உடனடியாக கண் தானம் செய்வோம் என உறுதிமொழி ஏற்றனர்.

    Next Story
    ×