என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொளத்தூரில் மின்சாரம் தாக்கி நாய்-மாடு பலி
    X

    மாடு - நாய் பலி

    கொளத்தூரில் மின்சாரம் தாக்கி நாய்-மாடு பலி

    • சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ஒரு நாய் மற்றும் ஒரு மாடு மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது.
    • போலீசார் சம்பவ இடம் சென்று மின்வாரிய ஊழியர்கள் மூலம் மின் இணைப்பை துண்டித்தனர்.

    கொளத்தூர்:

    கொளத்தூர் கங்கா தியேட்டர் அருகே நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ஒரு நாய் மற்றும் ஒரு மாடு மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது.

    இதுகுறித்து கொளத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடம் சென்று மின்வாரிய ஊழியர்கள் மூலம் மின் இணைப்பை துண்டித்தனர்.

    பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் நல்ல வேளையாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    Next Story
    ×