search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளக்கல்லில்  தி.மு.க.வின் 2-ம் ஆண்டு  சாதனை விளக்க பொதுக் கூட்டம்
    X

    வெள்ளக்கல் பஸ் நிறுத்தம் பகுதியில், அரசின் 2-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்த போது எடுத்தபடம்.

    வெள்ளக்கல்லில் தி.மு.க.வின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம்

    • தி.மு.க. சார்பில், அரசின் 2-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், வெள்ளக்கல் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று நடந்தது.
    • தலைமை கழக பேச்சாளர் வீரமுரசு கலந்து கொண்டு, கூட்டத்தின் நோக்கம் மற்றும் அரசின் 2-ம் ஆண்டு சாதனைகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறி பேசினர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில், அரசின் 2-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், வெள்ளக்கல் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று நடந்தது.

    இந்த பொதுக் கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.மல்லமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் மகாராஜன் வரவேற்று பேசினார்.

    ஒன்றிய நிர்வாகிகள் மணி, தேவராசன், வெங்கடேசன், கலாராணி, மோகன், மாதையன், ராமநாதன் பிளாஸ்டிக் செல்வம், சவுளூர் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் வீரமுரசு கலந்து கொண்டு, கூட்டத்தின் நோக்கம் மற்றும் அரசின் 2-ம் ஆண்டு சாதனைகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறி பேசினர்.

    இதில் சின்னசாமி, பீமன், ராமச்சந்திரன், பெருமாள், நடேசன், எல்லப்பன், சித்தன், முத்துராமன், அள்ளிமுத்து, மாரியப்பன், கலையரசன், பழனி, ராமு உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை கழக, நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர். முடிவில் நிர்வாகி சரவணன் நன்றி கூறினார்,

    Next Story
    ×