என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இண்டூரில் தி.மு.க. பொதுக்கூட்டம்
  X

  கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

  இண்டூரில் தி.மு.க. பொதுக்கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அன்பழகன் நூற்றாண்டு விழா பொது கூட்டம் நடைபெற்றது.
  • கதிர் ஆனந்த் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

  தருமபுரி,

  தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இண்டூர் பேருந்து நிலையம் அருகே பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொது கூட்டம் நடைபெற்றது.

  கூட்டத்திற்கு தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமை தாங்கினார். நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுந்தம், ஒன்றிய தலைவர் பெரியண்ணன் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் அமைப்பு சாரா ஓட்டுனர் அணியின் மாநில தலைவரும், வேலூர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

  இந்நிகழ்ச்சியின் முடிவில் 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தங்களை கதிர் ஆனந்த் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

  இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் வேலூர் கென்னடி, விவசாய தொழிலாளர் அணி மாநில துணை தலைவர் இன்பசேகரன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் தர்மசெல்வன், மாநில சுற்று சூழல் அணி துணை செயலாளர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.ஜி.சேகர், நகர செயலாளர் நாட்டான் மாது மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×