என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  -பிரகாஷ் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    X

    ஓசூரில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் -பிரகாஷ் எம்.எல்.ஏ. பங்கேற்பு

    • மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன் தலைமை தாங்கினார்.
    • உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கி கூட்டத்தில் பேசினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஓசூரில் நடைபெற்றது.

    ஓசூர் தனியார் மண்டபத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன் தலைமை தாங்கினார். ஜி.ராமு உள்ளிட்ட துணை அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

    மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கி கூட்டத்தில் பேசினார்.

    கூட்டத்தில், ஓசூர் மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ. சத்யா, மாவட்ட பொருளாளர் சுகுமாரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×