என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் தி.மு.க. அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம்
    X

    தருமபுரியில் தி.மு.க. அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம்

    • 10 பேரூராட்சிகளில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
    • அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தருமபுரி,

    தி.மு.க. அரசின் சொத்துவரி, மின்கட்டண உயர்வு ,பால் விலை உயர்வு ,சட்டம் ஒழுங்கு சீர்கெடு உள்ளிட்டவைகளை கண்டித்து தருமபுாி மாவட்டம் முழுவதும் 10 பேரூராட்சிகளில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

    காாிமங்கலம், மாரண்ட அள்ளி, பாலக்கோடு பேரூராட்சிகளின் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளா் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட ஏரளாமானோர் கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். பின்னா் பேசிய அமைப்பு செயலாளா் கே.பி.அன்பழகன் பேசும்போது தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து சொத்து வாி மின்கட்டண உயா்வு பால் விலை உயா்ந்து அடிமட்ட மக்களின் வாழ்வதாரம் பாதிக்கும் வகையில் உள்ளது என்றும் உடனடியாக தி.மு.க. அரசு திரும்ப பெறவேண்டும் என பேசினாா்.

    Next Story
    ×