என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை பொதுக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு முட்டை வழங்கிய தி.மு.க.வினர்
    X

    கோவை பொதுக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு முட்டை வழங்கிய தி.மு.க.வினர்

    • அனைத்து வகையிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலையில் உள்ளது.
    • சிறு, குறு தொழில் நிறைந்த தெற்கு தொகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இருந்து வருகிறார்.

    கோவை:

    கோவை ராஜவீதியில் தி.மு.க. சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் புகழேந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு தி.மு.க.வினர் இலவசமாக முட்டை வழங்கினர். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அளித்த நிதி முட்டை என கூறினர். மேலும் முட்டை போண்டா போட்டும் பொதுமக்களுக்கு சாப்பிட வழங்கினர்.

    முடிவில் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு அளித்த நிதி முட்டை என குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகளை பொதுமக்களிடம் தி.மு.க.வினர் காண்பித்தனர்.

    முன்னதாக கடலூர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் அனைத்து வகையிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலையில் உள்ளது. மாநில அரசுக்கு வர வேண்டிய நிதியை தடுத்து மக்களுக்கு செய்ய கூடிய நலத்திட்டங்களை நிறுத்துவதற்கான திட்டங்களை மத்திய அரசு செய்கிறது.

    அதேபோல் கோவையில் சிறு, குறு தொழில் நிறைந்த தெற்கு தொகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இருந்து வருகிறார். அவர் டெல்லி சென்று சிறு, குறு தொழில்துறையினர் படும் கஷ்டங்களை தெரிவித்து நடவடிக்கை எடுக்கலாம். பட்ஜெட் குறித்தும், தமிழகத்திற்கு வரவேண்டிய கல்வி நிதி உள்பட நிதி குறித்தும் பேசலாம். ஆனால் அவர் எதையும் செய்யவில்லை. மக்களுக்கு நல்லது செய்வது போல மக்களை ஏமாற்றி வருகிறார் என்றார்.

    Next Story
    ×