என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தி.மு.க கொடியேற்று விழா
  X

  தி.மு.க கொடியேற்று விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 8 இடங்களில் தி.மு.க கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • தி.மு.க கொடியினை ஏற்றி வைத்து அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்

  கடத்தூர்,

  தருமபுரி மாவட்டம் கடத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் சில்லாரஅள்ளி மற்றும் கடத்தூர் பேரூராட்சி பகுதியில் 8 இடங்களில் தி.மு.க கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் நடைபெற்ற, இந்த நிகழ்ச்சிக்குமேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட மேற்கு தி.மு.க மாவட்ட செயலாளர் முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சருமான பழனியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தி.மு.க கொடியினை ஏற்றி வைத்து அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்

  இந்த நிகழ்ச்சியில் வர்த்தகர் அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி சித்தார்த்தன், பேரூராட்சி தலைவர் மணி, வக்கீல் முனிராஜ் , நகர செயலாளர் மோகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல், ஜலபதி, பச்சியப்பன், அன்பரசு, மலர்க்கொடி மாரிமுத்து, தங்கராஜ், ஆதாம், சுகுணா ஆறுமுகம்,கார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

  Next Story
  ×