என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல் ரெயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் ஆய்வு
- சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சின்கா ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
- குறிப்பாக ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் பயணிகளுக்கு எந்த அளவில் உள்ளது என்பது குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
நாமக்கல்:
சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ரெயில் நிலையங்களுக்கு நேரடியாக சென்று புதிதாக பொறுப்பேற்ற சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சின்கா ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் பயணிகளுக்கு எந்த அளவில் உள்ளது என்பது குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு அவர் நேற்று வந்தார். அங்கு பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது அவரிடம், நாமக்கல் வழியாக கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும், பயணிகளுக்கான உணவகம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை ரெயில் பயணிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அளித்தனர்.
Next Story






