என் மலர்
உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர் அலுவலர் நியமனம்
- பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வது
- குறைகளைத் தீர்ப்பதற்காக காந்திமதி என்பவர் சேலம் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.அதன்படி, இத்திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக காந்திமதி என்பவர் சேலம் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே பொதுமக்கள் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்ட பயனாளிகள், இத்திட்டம் தொடர்பான குறைகள் ஏதும் இருப்பின் slmombuds@gmail.com அல்லது மாவட்ட மக்கள் குறைதீர் அலுவலர் (Ombudsman), அறை எண்.211, 2-ம் தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சேலம் மாவட்டம் என்ற முகவரியிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவவாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.






