search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட பொதுக்குழு கூட்டம்
    X

    மாவட்ட பொதுக்குழு கூட்டம்

    • வணிகர்களுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் .
    • கடைகளுக்கு விடுமுறை அளித்து திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    தருமபுரி,

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிரிதர் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்து கொண்டு வருகிற மே மாதம் 5-ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் 30-வது வணிகர் உரிமை முழக்க மாநாடு குறித்து விளக்கி பேசினார். இந்த மாநாட்டில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள் அனைவரும் தங்களது கடைகளுக்கு விடுமுறை அளித்து திரளாக கலந்து கொள்வது, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கடைகளில் ஏற்கனவே கடை நடத்தி வரும் வணிகர்களுக்கு மீண்டும் கடைகளை ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட இணை தலைவர்கள் சின்னசாமி, தர்மன், மாவட்ட துணைத் தலைவர்கள் மணி, சத்தியநாராயணன், சத்திய நாராயணன், மாவட்ட இணை செயலாளர் மாது, மாவட்ட இணை செயலாளர் ராமலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர்கள் அசம்கான், நாராயணசாமி, முத்து, கண்ணப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் ஆண்டாள் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சி களை ஆசிரியர் சவுந்திர பாண்டியன் தொகுத்து வழங்கினார்.

    Next Story
    ×