என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் ஆண்டறிக்கை வெளியிடப்பட்டது.
நத்தம் என்.பி.ஆர்.கல்லூரியில் மாவட்ட தடகள சங்க பொதுக்கூட்டம்
- மாவட்ட அளவில் சிறந்த தடகள வீரர் மற்றும் வீராங்கனை களின் கல்லூரி படிப்பு செலவு மற்றும் விளை யாட்டுக்கு தேவையான உபகரண செலவுகளை மாவட்ட தடகள சங்கமே ஏற்றுக் கொள்ளும்.
- 2 மாதங்களுக்கு ஒரு முறை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மாதம் 2-வது சனிக்கிழமை தடகள போட்டிகள் நடத்துவதற்கு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பாக வருடாந்திர பொதுக்கூட்டம் என்.பி.ஆர். கல்விக்குழும வளாகத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில் கடந்த வருடத்திற்கான ஆண்டறிக்கையை சங்கத்தின் செயலாளர் சிவக்குமார் வெளியிட தலைவர் துரை பெற்றுக் கொண்டார். மேலும் கடந்த ஆண்டு மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக மாநில அளவில் சாதனை படைத்த 17 மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றித ழ்கள் வழங்கப்ப ட்டது.
மாவட்ட அளவில் முதல்முறையாக குழந்தை களுக்கான தடகள போட்டிகள் மற்றும் (14,16,18,20) வயதுடைய வீரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி தடகள போட்டி திண்டுக்கல் ஜி.டி.என். கலைகல்லூரியில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
மேலும் மாவட்ட அளவில் சிறந்த தடகள வீரர் மற்றும் வீராங்கனை களின் கல்லூரி படிப்பு செலவு மற்றும் விளை யாட்டுக்கு தேவையான உபகரண செலவுகளை மாவட்ட தடகள சங்கமே ஏற்றுக் கொள்ளும்.
இதில் 2 மாதங்களுக்கு ஒரு முறை போட்டிகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மாதம் 2-வது சனிக்கிழமை தடகள போட்டிகள் நடத்துவதற்கு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட தடகள ச ங்கத்தின் அடுத்தாண்டிற்கான தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டு சங்க உறுப்பினர்கள் ஆலோ சனை ஏற்றுக்கொண்டு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.






